புத்திரசுவிகாரம் - பாகம் - 1 Jeffersonville, Indiana, USA 60-0515E 1நான் அடிக்கடி கூறுவது போல், ''கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன்.'' ''கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்'' என்று தாவீது ஒரு சமயம் கூறினான் என்று எண்ணுகிறேன். கர்த்தருடைய ஆலயத்தைத் தவிர மேலான இடம் வேறொன்றையும் நான் அறியேன். இன்றிரவு... ஜார்ஜியாவிலிருந்து அநேக நண்பர்கள் இங்கு வந்துள்ளனர். இரவு உணவிற்குப் பிறகு ஒருக்கால் அவர்கள் வீடு திரும்பலாம். அவர்களில் சிலர் அதன் பின்பும் தங்குவார்களென நம்புகிறேன். எங்களிடமுள்ள அறைகள் உங்களுக்காக திறந்து கொடுக்கப்பட்டுள்ளன. புதன் இரவன்று இந்த வேதபாடத்தை நாம் தொடர்ந்து நடத்துவோம். கர்த்தருக்குச் சித்தமானால், மீண்டும் ஞாயிறன்று இதை தொடரலாம். 2சாட்டக்குவாவில் (chatauqua) நடைபெறவிருக்கும் கூட்டங்கள் 6-ந்தேதியன்று தொடங்குகின்றன. விடுமுறையைத் திட்டம் செய்திருப்போர் அனைவருக்கும் இதை கூறுகிறேன். நாங்கள் சாட்டக்குவாவில் ஒரு மகத்தான, அற்புதமான நேரத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். ஒவ்வொரு சமயமும் எங்களுக்கு அங்கு அற்புதமான நேரம் இருந்து வந்துள்ளது. சாதாரணமாக அங்கு திரளான ஜனக்கூட்டம் இருப்பதில்லை.... சுமார் பத்தாயிரம் பேர் அதில் கலந்து கொள்வது வழக்கம். கடந்த ஆண்டில் ஏழாயிரம் பேர் வந்திருந்தனர். இடம் நிரம்பியிருந்தது. ஆயினும் நிற்பதற்கு அங்கு போதிய ஸ்தலம் உண்டாயிருந்தது. ஆனால், இருக்கைகள் அனைத்திலும் ஜனங்கள் அமர்ந்திருந்தனர். அந்த கூட்டங்களை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம். 3அநேக போதகர் சகோதரர்களை இங்கு காண்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த மிஷனரியின் பெயர் என் நினைவுக்குவரவில்லை. சகோதரன், சகோதரி ஹயூம்ஸ் (HUMES). நீங்கள் தானே அங்கு அமர்ந்திருப்பது? அவர்களுடைய பிள்ளைகளும் கூட. நீங்கள் வந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மற்றவர்கள், சகோ. பாட், சகோ. டால்டன், ஓ, அநேகர், சகோ. பீலர். சற்று முன்பு சகோ. காலின்ஸை கண்டேன். எல்லோர் பெயரையும் அழைப்பதென்பது மிகவும் கடினம். இன்றிரவு நீங்கள் கர்த்தருடைய வீட்டிற்கு வந்திருப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். எனக்குப் பின்னால் அமர்ந்துள்ள இந்த விலையேறப்பெற்ற சகோ. நெவில், நாங்கள் தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் போது என்னுடன் ஜெபித்துக் கொண்டிருப்பார். சார்லி, உங்களையும் சகோதரி நெல்லியையும் குழந்தைகளையும் இன்றிரவு காண்பதில் எனக்கு மகிழ்ச்சி. வேதத்தைக் கற்பிப்பது என்பது... சகோ. வெல்ஷ், உங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். நீங்கள் பின்னால் அமர்ந்துள்ளதைக் காண்கிறேன். 4வேதாகமத்தைக் கற்பிப்பது என்பது மிகவும் அபாயகரமான செயலாகும். அது குறுகலான பனிக்கட்டியின் மேல் நடப்பது போன்றது. ஆயினும் இந்நேரத்தில் நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் எந்த ஸ்தானத்தை அடைந்துள்ளோம் என்னும் பூரண அறிவை சபையானது பெற்றுக்கொள்ளுதல் நல்லதென்று எண்ணுகிறேன். பிரசங்கம் செய்வதென்பது மிகவும் அருமையானது. ஆனால், சகோ. பீலர் அவர்களே, வேதபாடம் கற்பித்துக் கொடுப்பதென்பது, முக்கியமாக சபைக்கு, பிரசங்கம் செய்வதைக் காட்டிலும் சற்றுமேலான ஒன்றாகும். பிரசங்கம் என்பது பாவியைக் கவர்ந்து, வார்த்தையின் மூலம் அவனுடைய பாவத்தை உணர்த்துகிறது. ஆனால், வேதபாடம் கற்பித்தல் என்பது ஒரு மனிதனை அவனுடைய ஸ்தானத்தில் பொருத்துகின்றது. நமது ஸ்தானம் என்னவென்று நாம் உணரும் வரை, நமக்கு சரியான விதத்தில் விசுவாசம் இருக்க முடியாது. 5இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்னை ருஷியாவுக்கு அயல் நாட்டு தூதனாக (ambassador) அனுப்பியுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் என்னை அதிகாரப்பூர்வமாக அனுப்பினால் அதிகாரம் முழுவதுமே என்னை ஆதரிக்கும். நான் ஒரு அயல் நாட்டு தூதன் என்று அங்கீகரிக்கப்பட்டால், நான் கூறும் சொற்கள் அனைத்துமே அமெரிக்க ஐக்கிய நாடுகள் கூறுபவையே. அப்படியானால், தேவன் நம்மை தமது தூதர்களாக (ambassadors) அனுப்பியிருப்பாரானால், வானத்திலுள்ள சகல அதிகாரமும், தேவன் என்னவாயிருக்கிறாரோ அந்த அனைத்தும், அவருடைய தேவதூதர்களும், அவருடைய வல்லமை அனைத்தும் நாம் கூறும் சொற்களை ஆதரிக்க வேண்டும். நாம் அபிஷேகம் பண்ணப்பட்டு, சரியான விதத்தில் அவருடைய தூதர்களாக நாம் ஜனங்களிடம் அனுப்பப்பட்டிருப் போமானால்,தேவன் தமது வார்த்தையை கெளரவிக்க வேண்டியவராயிருக்கிறார். ஏனெனில் அவர் பயபக்தியுடன், ''பூலோகத்திலே நீங்கள் கட்டுகிறது எதுவோ, அதை நான் பரலோகத்தில் கட்டுவேன். பூலோகத்திலே நீங்கள் கட்டவிழ்ப்பது எதுவோ, அதை நான் பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன்'' என்று கூறியுள்ளார். ஓ, அத்தகைய மகத்தான வாக்குத்தத்தங்களை அவர் சபைக்கு அளித்துள்ளார். 6அன்றொரு நாள் என் எளிய சொற்பவிதத்தில் நான் பரலோகத்தைக் குறித்து கண்ட தரிசனத்தை விவரித்ததைக் கேட்ட அநேகர் இங்குள்ளனர் என்று நினைக்கிறேன். தேவன் தங்களிடம் கூறினதாகயாராகிலும் என்னிடம் எதையாகிலும் கூறினால், அதை சந்தேகிக்க நான் விரும்புவதில்லை. அது வேதத்துடன் ஒத்துப் போகவில்லையென்றாலும், அந்த சகோதரன் கூறியவைகளை நான் நம்பவே முற்படுவேன். என்னைப் பொறுத்தவரையில் நான் வேதத்தில் மாத்திரம் நிலைத்து நிற்பேன். அந்த சகோதரன் எதையோ தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்றும், அவர் எங்கோ சற்று குழப்பமுற்றுள்ளார் என்று நான் யோசிப்பேன். ஆயினும் அவர், என் சகோதரன் என்பதை நான் நம்புவேன். 7ஏதாகிலும் என் இருதயத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்குமானால், வரப்போகும் ஆண்டுகளில் அது என்னை விட்டு அகன்று விடாது என்று நினைக்கிறேன், சென்ற ஞாயிறு காலை நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. அது என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்துவிட்டது. எனக்கு பயம் கிடையாது. எனக்கு மரணத்தைக் குறித்து சிறிதேனும் பயமில்லை. மரணம் நம்மை பயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அது என்னவென்று நீங்களும் புரிந்து கொண்டால், நீங்களும் அதைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை.... அதைக் குறித்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட வேண்டும். ஏனெனில், அதை விவரிக்க வேறு வழி ஏதுமில்லை. அதை விவரிக்க ஏற்ற வார்த்தைகள் ஆங்கில அகராதியிலோ அல்லது வேறெந்த அகராதியிலோ கிடையாது. ஏனெனில், அது நித்தியமாகும். அது நேற்று என்பதல்ல, நாளை என்பதல்ல, அல்லது நிகழ்காலத்தைக்குறித்தல்ல. அது, ''எனக்கு நல்லுணர்வு ஏற்பட்டுள்ளது“ என்று கூறிவிட்டு ஒருமணி நேரம் கழித்து, ”எனக்கு அவ்வளவு நல்லுணர்வு தோன்றவில்லை'' என்று கூறுவதும், மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து, ''எனக்கு இப்பொழுது நல்லுணர்வு ஏற்பட்டுள்ளது'' என்று கூறுவதல்ல. அது எக்காலத்திலும் நிகழ்காலமே தான். பாருங்கள்? அது ஓய்வதில்லை. அந்த மகிமை பொருந்தின சமாதானம் எக்காலத்திலும் நிலவி கொண்டிருக்கும். 8அங்கு பாவம் இருக்க முடியாது. பொறாமை இருக்க முடியாது, வியாதி இருக்க முடியாது. இவையனைத்தும் பரலோகக் கரையை அடையவே முடியாது. இதை எடுத்துக் கூறும் சிலாக்கியம் எனக்கு அருளப்படாமல் போனால், ஒருக்கால் அது அருளப்படாமல் இருக்கலாம். அப்படியானால் தேவன் என்னை மன்னிப்பாராக. ஆனால், அந்த சிலாக்கியம் எனக்கு அருளப்படுமானால், நான் சிலவற்றைக்காண தேவன் என்னை முதலாம் வானம் வரைக்கும் எடுத்துக் கொண்டார் என்பதைக் கூற விரும்புகிறேன். வேதத்தில் ஒருவர், அது பவுல் என்று நம்புகிறேன், மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்து கொள்ளப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. முதலாம் வானமே, இவ்வளவு மகிமை பொருந்தினதாயிருக்குமானால், மூன்றாம் வானத்தின் மகிமை எப்படி இருந்திருக்கும்? அதைக் குறித்து பவுலால் பதினான்கு ஆண்டுகளாக பேச முடியவில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை. அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்போயிருந்தானோ என்று தெரியவில்லையென்று அவன் கூறுகிறான். அந்த மகத்தான அப்போஸ்தலனுடன் கூட நானும் சேர்ந்து, அவனுடைய உத்தியோகத்தை பகிர்ந்து கொள்ளவோ அல்லது என்னை அவனுக்கு சமமாக்கிக்கொள்ளவோ நான் முயலவில்லை, நான் சரீரத்திற்குப் புறம் போயிருந்தேனோ என்று அறியேன் என்று கூற விரும்புகிறேன். ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும். உங்களை எவ்வளவு தத்ரூபமாகக் காண்கிறேனோ, அவ்வளவு தத்ரூபமாக அது அமைந்திருந்தது. 9ஒரு சிறு மேகம் அல்லது ஆவி அங்கு மிதந்து வருமென்றும், அதைக் கண்டு, ''அதோ என் சகோதரன் அங்கு செல்கின்றார், அதோ என் சகோதரி அங்கு செல்கின்றாள். அது, சார்லியும், நெல்லியும். அதோ, சகோதரன். ஸ்பென்சரும், சகோதரி. ஸ்பென்சரும் செல்கின்றனர்'' என்று கூறுவேன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது எப்பொழுதும் எனக்குப் புதிராகவே இருந்தது. என் கண்கள் கல்லறையினுள் அழுகி கொண்டிருக்குமானால், கேட்பதற்கு என் காதுகள் இல்லாதிருக்குமானால், என் இரத்தம் உறைந்து போய் அவர்கள் என் சவத்திற்கு தைலமிட்டு, அது இப்பொழுது தண்ணீரிலோ அல்லது நிலத்திலோ இருந்து, என் சிந்தனை சக்தியும் என் மூளை அணுக்களும் அழிந்து போன பின்பு, நான் மிதந்து கொண்டிருக்கும் ஒரு ஆவியாயிராமல் வேறு எவ்வாறு இருக்க முடியும் என்று நான் வியந்ததுண்டு. அது என்னை வருத்தமடையச் செய்தது. நான் எப்படி, ''ஹலோ சகோ. பாட், ஹலோ சகோ. நெவில், உங்களைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி,“ என்று ஒரு ஆவியைப் பார்த்து கூற முடியும் என்று யோசிப்பது வழக்கம்...................................................................................................................................................................................................................................................................................................................... 10ஆனால், நான் கொண்டிருந்த கருத்து தவறென்று உணருகிறேன். ஏனெனில், “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், வேறொன்று நமக்காகக் காத்திருக்கிறது,'' என்று வேதம் கூறுகின்றது. காதுகள், உதடுகள், சிந்தை இவற்றை கொண்ட வேறொரு, கூடாரம். ”பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும் பேசக்கூடிய, உணரக்கூடிய மற்றொரு சரீரம். இந்த கருத்து, இப்பொழுது என் மனதில் தோன்றுகிறது. மோசே மரித்து எண்ணூறு ஆண்டு காலமாக யாருமே அறியாத கல்லறையில் வைக்கப்பட்டிருந்தான். எலியாவும், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பரலோகத்திற்கு ஏறிச்சென்றான். ஆனால், மறுரூபமலையின் மேல் அவர்கள் இருவரும் இயேசுவுடன் பேசுகிறவர்களாகக் காணப்பட்டார்கள். 11சாமுவேல் மரித்து குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் கழித்த பிறகு எந்தோரிலிருந்த சூனியக்காரி அவனை வெளியே வரப்பண்ணினாள். அவள் முகங்குப்புற விழுந்து, ''நீர் என்னை மோசம் போக்கினீர். நீர் சவுலாச்சே. நான் தேவர்கள் ஏரி வருகிறதைக் காண்கிறேன்'' என்றாள் (1.சாமு; 28:12,13) அவள் அஞ்ஞானி, பாருங்கள். ஆகவே அவள், ''தேவர்கள் ஏறி வருகிறதைக் காண்கிறேன்“ என்றாள். சவுலால் சாமுவேலைக் காணமுடியவில்லை. அவன் அவளிடம், “அவருடைய ரூபம் என்ன? அதை எனக்கு விவரித்துச் சொல்” என்று கேட்டான். அவள், ''அவர் மெலிந்த தேகமுடையவர். அவர் சால்வையைப் போர்த்துக் கொண்டிருக்கிறார்“ என்றாள். அவன் பரபரப்புடன், அது தான் சாமுவேல். எனக்கு முன்னால் அவரைக் கொண்டு நிறுத்து'' என்றான். சாமுவேலின் உருவமைப்பு அல்லது தன்மை எதுவும் மாறவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவன், அப்பொழுதும் தீர்க்கதரிசியாயிருந்தான். அடுத்த நாள் என்ன நேரிடுமென்று அவன் சவுலிடம் கூறினான். எனவே பாருங்கள், நாம் கல்லறையினருகில் அழுது புலம்புகிறோம். ஆனால், மரணம் நமது தன்மை எதையும் குறைப்பதில்லை. நமது இருப்பிடத்தை மாத்திரம் அது மாற்றுகிறது. இவ்விடத்திலிருந்து அது நம்மை... வயது என்றால் என்ன? நான் இன்னும் ஒரு மணி நேரம் உயிரோடிருக்க நேர்ந்தால் நான் பதினாறு வயது நிரம்பியவர்களைக் காட்டிலும், ஐந்து வயது சிறுவர்களைக் காட்டிலும் அதிக காலம் உயிர் வாழ்ந்திருக்கிறேன். வயது என்பது ஒன்றுமில்லை. நாம் ஒரு நோக்கத்திற்காக, ஏதோ ஒன்றைச் செய்வதற்காக இங்குள்ளோம். 12இங்கு அழகான அநேக தாய்மார்கள் அமர்ந்துள்ளனர். அவர்களில் சிலருக்கு அறுபது, எழுபது வயது ஆகிவிட்டது. அவர்கள், சகோ. பிரான்ஹாமே, நாங்கள் என்னத்தை சாதித்து விட்டோம்?'' என்று கேட்கலாம். நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்த்தீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று குறிக்கப்பட்டிருந்ததோ, அதை செய்தீர்கள். வயதான தகப்பன்மார்கள் சிலர், நாங்கள் நிலத்தை உழுது பண்படுத்தினோம். நாங்கள் அதையெல்லாம் செய்தோம். ஆனால், நாங்கள் பிரசங்கம் செய்யவில்லை,'' எனலாம். தேவன் உங்களை எதற்காக அனுப்பினாரோ, அதை பிழையின்றி செய்தீர்கள். எனவே, உங்களுக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டாயிருக்கும். 13நேற்று ஒரு வயோதிப மருத்துவ நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவருக்கு எண்பது வயது நிரம்பிவிட்டது. அவருடைய மைத்துனி இன்றிரவு சபைக்கு வந்திருக்கிறாள். அவரைக் குறித்து அவள் சற்று கவலை கொண்டிருந்தாள். எனவே, அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவருடைய முகம் பிரகாசமுற்றது. அநேக ஆண்டுகளுக்கு முன்பு கொலராடோவில் அவர் வேட்டையாடின் சம்பவம் ஒன்றை என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். அங்கு தான் நானும் வேட்டைக்குச் செல்கிறேன். அவருடைய முகம் மிகவும் பிரகாசிக்க தொடங்கினது. நான் அவரிடம், ''எவ்வளவு காலமாக நீங்கள் மருத்துவத் துறையில் இருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். ''நீ பால் குடிக்கும் குழந்தையாயிருந்த முதற்கொண்டே'' என்று அவர் பதிலளித்தார். மேலும் அவர், ''அநேகமுறை நான் என் குதிரையில் சேணம் கட்டி, சிகிச்சைக்கு வேண்டியவைகளை தோள் பையில் எடுத்துக் கொண்டு, அதை தொங்கவிட்டுக் கொண்டு சென்றதுண்டு. அநேகமுறை நான் நடந்தும் கூட சென்றதுண்டு'' என்றார். நான், ''ஆம், நீரோடைகளின் கரைகளில், அதிகாலையில் இரண்டு மணிக்கு, கையில் டார்ச் விளக்கைப் பிடித்து கொண்டு சென்று வயிற்று வலியால் அவதியுற்ற ஒரு சிறு குழந்தைக்கோ அல்லது பிரசவ வேதனை கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கோ அவர்கள் வீட்டைத் தேடிக்கண்டு பிடித்து வைத்தியம் பார்த்திருப்பீரே'' என்றேன். ''அது உண்மை என்றார் அவர்.'' 14நான், ''டாக்டர், அழிவையும் அழியாமையும் பிரிக்கும் அந்த கோட்டிற்கு அப்பால், அவ்விதம் சேவை புரிந்த மருத்துவர்களுகென தேவன் ஒரு இடத்தை வைத்துள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா?'' என்று கேட்டேன். அவருடைய கண்களில் கண்ணீர் மல்கியது. அவர் அழத் தொடங்கினார். அவர், தமது பலவீனமான கரங்களை நீட்டி என்னைப் பிடித்து கொண்டு, ''அப்படி இருக்கலாம் என்று நம்புகிறேன்'' என்றார். இந்த தேசத்திற்கு அப்பால், தேவன் ஒரு மனிதனின் ஆத்துமாவின் தன்மையை ஆராய்ந்தறிகிறார். பின்பு நான் அவருக்கு இந்த திருப்தியளிக்கும் வேதவாக்கியம் ஒன்றை கூறினேன். அநேகமுறை சேறு நிறைந்த வயல்களின் வழியாக இரவில் நடந்து சென்று, யாருக்காகிலும் ஒருவருக்கு உதவி செய்ய முயன்று, அதற்காக காசு வாங்காமல் அவர் இருந் திருக்கக்கூடும். பரவாயில்லை. நான் அவரிடம், ''இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்'' என்று இயேசு வேதத்தில் கூறியுள்ளார்'' என்று சொன்னேன். அது உண்மை. 15இன்றிரவு, கர்த்தர் அனுமதித்தால், சபைக்கு இந்த மூன்று பாடங்களைக் கற்பித்து, அவர்கள் எப்படி, எதை எதிர் நோக்கியிருக்க வேண்டும் என்றும், நாம் யார் என்றும் காண்பிக்க விரும்புகிறேன். முதலாவதாக நாம் அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தின் முதலாம் அதிகாரத்திலிருந்து தொடங்கலாம். இந்த மூன்று நாட்களிலும், ஒவ்வொரு மாலையிலும், முதல் மூன்று அதிகாரங்களில் ஒவ்வொன்றினை நாம் படிப்போம். இன்றிரவு, புதன், மறுபடியும் ஞாயிறு காலை. எபேசியர்; 1ம் அதிகாரம். நாம் ஒருமித்து இப்பொழுது இதை ஆராயும் போது, இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். எபேசியர் புத்தகம் பழைய ஏற்பாட்டிலுள்ள யோசுவாவின் புத்தகத்துடன் முற்றிலும் இணைகின்றது. எபேசியர் புத்தகம். 16நமது பாடத்தை விட்டு நாம் சற்று அகன்று சென்றுவிட்டால், எங்களுடன் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். அதை தொடங்கும். முன்பு நாம் தலை வணங்கி, அவருடைய உதவியைக் கோருவோம். ஆண்டவரே, நாங்கள் உமது பரிசுத்த வசனத்தை இப்பொழுது அணுகுகிறோம். வானத்தையும், பூமியையும் விட அது மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஏனெனில் வேதாகமத்தில், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்று நாங்கள் வாசிக்கிறோம். உமது இரத்தம் என்னும் கிரயத்தினால் கொள்ளப்பட்டவனாய் இந்த பிரசங்க பீடத்தின் மேல் இன்றிரவு நான் வந்திருக்கும் இந்த பயபக்தியான நேரத்தில், இன்றிரவு இங்கு அமர்ந்துள்ள இந்த அருமையான மானிடர், வரப்போகும் அந்த வாழ்க்கைக்கென ஒவ்வொரு சிறு நம்பிக்கையையும் இறுகப்பற்றிக் கொள்கின்றனர். இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியும் தன் ஸ்தானத்தை உணர்ந்து கொள்ள, அது போதுமானதாயிருப்பதாக. ஆண்டவரே, இந்த மகத்தான ஐசுவரியத்துக்குள் இன்னும் வராத ஒவ்வொருவரும், ராஜ்யத்தை நோக்கி தொடர்ந்து சென்று வாயிற்காப்போன் கதவைத் திறக்கும் வரைக்கும் கதவைத் தட்டும்படி அருள் புரியும். 17வேதாகமத்தை யாரும் சொந்தவிதத்தில் வியாக்கியானம். செய்யக் கூடாது என்று நாங்கள் படிக்கிறோம். ஆண்டவரே, நானோ அல்லது வேறெந்த ஊழியக்காரனோ சொந்த வியாக்கியானத்தை வார்த்தைக்கு அளிக்காதபடிக்கு தடுத்து விடுவீராக! அது எழுதப்பட்ட விதமாகவே அதை நாங்கள் படித்து விசுவாசிக்க அருள்புரியும். முக்கியமாக, ஆடுகளின் மேய்ப்பர்கள் என்னும் நிலையிலுள்ள போதர்களாகிய நாங்கள், அந்த சிறு மந்தைகளுடன் என்றாவது ஒரு நாள் அந்த மகத்தான தேசத்தில் ஒன்று கூடுவோம். நாங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் நின்று, பவுல், பேதுரு, லூக்கா, மாற்கு, மத்தேயு போன்றவர்கள் அவர்களுடைய சந்ததிகளுடன் நியாந்தீர்க்கப்படுவதை காண்போம். ஆண்டவரே, நான் தாழ்மையோடு தவழ்ந்து வந்து உமது விலையேறப் பெற்ற பாதங்களை என் கைகளினால் தொடும் அந்நேரத்தில், ஒரு கோடி பரிசுகளை (trophies) உமது பாதத்தண்டையில் வைத்து, ''ஆண்டவரே, இவர்கள் உம்முடையவர்கள்“ என்று கூற அருள்புரியும். 18ஓ, தேவனே உமது ஆவியினாலும், அன்பினாலும் நன்மையினாலும் எங்களைப் புதிதாய் நிரப்புவீராக. அந்த கவிஞன் அநேக ஆண்டுகளுக்கு முன்பு தன் கவிதையில் எழுதினது போல், அருமையான மரிக்கும் ஆட்டுக்குட்டியானவரே, கிரயத்தினால் கொள்ளப்பட்ட தேவ சபை பாவம் செய்யாதபடி இரட்சிக்கப்படும் வரைக்கும், உமது விலையேறப்பெற்ற இரத்தம் அதன் வல்லமையை ஒருக்காலும் இழந்து போவதில்லை உமது கரத்திலிருந்து பெருக்கெடுத்த அந்த இரத்த வெள்ளத்தை நான் விசுவாசத்தினால் கண்டது முதல் மீட்பின் அன்பே என் பாட்டாயுள்ளது. நான் மரிக்கும் வரைக்கும் அது அவ்வாறே இருக்கும்.'' அந்த கவிஞன் தொடர்ந்து, இந்த எளிய, மழலை பேசும் திக்கு நாவு மெளனமாக. கல்லறையில் படுத்துக் கொண்டிருக்கும் போது, இனிமையான பாடல் ஒன்றின் மூலமாய் உமது இரட்சிப்பின் வல்லமையைக் குறித்துப்பாடுவேன்'' என்கிறார். அப்படியானால், உம்முடைய பிள்ளைகளுக்கு. கல்லறை மரணத்தை அளிப்பதில்லை என்று தெளிவாகிறது. அது, இளைப்பாறுதல் ஸ்தலம் மாத்திரமே. அது, நாங்கள் மறைந்து கொள்ளும் ஸ்தலம். அங்கு அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக் கொள்கிறது. ஆண்டவரே, வார்த்தையில் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதை இன்றிரவு நாங்கள் தெளிவாகக் காணக் கிருபை செய்யும். ஆண்டவரே, உமது வருகை மட்டும் உமக்கு நாங்கள் உண்மையாக ஊழியம் செய்ய, எங்கள் பணியில் எங்களைப் பொருத்தும். இதை இயேசுவின் நாமத்திலும் அவருடைய நிமித்தமாகவும் கேட்கிறோம். ஆமென். 19இப்பொழுது, நான் உங்களிடம் கூறின் விதமாக எபேசியர் புத்தகம்... புதிய ஏற்பாட்டில் காணப்படும் மகத்தான புத்தகங்களில், இது ஒன்று என்பது எனது கருத்து. கால்வீனியக் கொள்கை ஒருபுறமும், ஆர்மீனியக் கொள்கை மற்றொரு புறமும் செல்கின்றது. ஆனால், எபேசியர் புத்தகமோ அவைகளை ஒன்று சேர்த்து சபையை அதன் ஸ்தானத்தில் நிறுத்துகின்றது. அதை நான் யோசுவாவின் புத்தகத்துடன் ஒப்பிட்டேன். நீங்கள் கவனிப்பீர்களானால், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்களுடைய பிரயாணம் மூன்று கட்டங்களைக் கொண்டது. முதலாம் கட்டம், எகிப்தை விட்டு வருதல். அடுத்த கட்டம், வனாந்தரத்தில் பிரயாணம் செய்தல். அதற்கடுத்த கட்டம் கானானை அடைதல். 20கானான் ஆயிர வருட அரசாட்சிக்கு முன்னடையாளமாகத் திகழ்வதில்லை. அது ஜெயங்கொள்பவனின் காலத்திற்கு முன்னடையாளமாக அமைந்துள்ளது. ஏனெனில், அவர்கள் கானானில் கொன்று, சுட்டெரித்து தேசத்தைக் கைப்பற்றினர். ஆயிரம் வருட அரசாட்சியில் மரணம் இருக்காது. அது, செய்த வேறொன்று என்னவெனில், அவர்கள் மோசேயை விசுவாசித்து எகிப்தை விட்ட பின்பு, விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் (Justification) என்பதைக் கொண்டு வந்தது வனாந்தரத்தில் அக்கினி ஸ்தம்பத்தை பின் தொடர்ந்து பலி செலுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியின் பாவ நிவாரணத்தின் கீழ் பிரயாணம் செய்தல், பரிசுத்தமாக்கப்படுதல் (Sanctification): அதன் பின்பு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தல்... 21புதிய ஏற்பாட்டின் விசுவாசிக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள தேசம் எது? அந்த வாக்குத்தத்தம் பரிசுத்த ஆவிதான். ''அதற்குப் பின்பு நான் (கடைசி நாட்களில்) மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகை ஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்,'' (யோவேல்; 2:28-36) பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு, பிரசங்கத்துக்கு வேண்டியதன் பொருளை எடுத்து பிரசங்கம் செய்து முடித்த பின்பு ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினான். பாவ மன்னிப்பு, பாவம் அனைத்தையும் களைந்து போடுதல். 22நீங்கள் கவனித்தீர்களா? யோர்தானைக் கடப்பதற்கு முன்பு யோசுவா ஜனங்களை நோக்கி, ''உங்கள் பாளயத்திற்கு சென்று உங்கள் துணிகளை சுத்தம் பண்ணுங்கள். உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள். யாரும் உங்கள் மனைவிகளிடத்தில் பிரவேசிக்க வேண்டாம். இன்னும் மூன்று நாட்களுக்குள் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள்“ என்றான். பார்த்தீர்களா? வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்வதற்கு அது ஆயத்தமாகும் கற்பாராம் முறையாகும். இஸ்ரவேலருக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்னவெனில்; தேவன் ஆபிரகாமுக்கு பாலஸ்தீனா தேசத்தை தருவதாக வாக்களித்திருந்தார். அது என்றென்றைக் அவர்களுடைய சுதந்திரமாயிருக்கும் அவர்கள் என்றென்றும் அத்தேசத்தில் தங்கியிருக்க வேண்டும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடையும் முன்பு கட்டங்கள் இருந்தன. அது புதிய ஏற்பாட்டுடன் முற்றிலும் இணைவதைக் கவனியுங்கள்... இது உங்கள் சிலருடைய கருத்துக்களுக்கு முரணாயிருக்கலாம். அருமையான நசரீன் ஜனங்களே, தேவ சபை ஜனங்கள், இது உங்களைப் புண்படுத்த வேண்டாம் இதை கூர்ந்து கவனியுங்கள் இந்த ஒப்புவமை முற்றிலுமாக இணைகின்றதா என்பதை நன்கு கவனியுங்கள். 23இஸ்ரவேல் ஜனங்களின் பிரயாணத்தில் மூன்று கட்டங்கள் இருந்தன. இந்த பிரயாணத்திலும் மூன்று கட்டங்கள் உள்ளன. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து விசுவாசித்தினால் நீதிமானாக்கப்பட்டு, எகிப்து தேசத்தை புறக்கணித்து வெளி வருகிறோம். பின்பு அவர் சிந்தின தமது இரத்தத்தின் மூலம் நாம் அந்நியரும் சஞ்சாரிகளுமாகி, நமக்கு வாக்குத்தத்தமாக அளிக்கப்பட்டுள்ள அந்த வரப்போகிற தேசத்தையே நாம் நாடித் தேடுகிறோம் என்று கூறுகிறோம். வனாந்தரத்திலிருந்த, இஸ்ரவேல் ஜனங்களும் அப்படிதான் இருந்தனர். அவர்களும் சஞ்சாரிகளாகத் திரிந்து கொண்டிருந்தனர். இளைப்பாறுவதற்கு அவர்களுக்கு இடம் ஏதுமில்லை. ஒவ்வொரு இரவும், அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தை பின் தொடர்ந்து பிரயாணம் செய்தனர். முடிவில் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தையடைந்து அங்கே தங்கினர் 24விசுவாசியும் அந்த இடத்திற்கு தான் வர வேண்டியவனாயிருக்கிறான். முதலாவதாக அவன் ஒரு பாவி என்னும் உணர்வை பெறுகிறான். அதன் பின்பு அவன் தண்ணீரினால் பிரிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரிக்கப்படுகிறான். அவன், விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறபடியால், அவன் கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பங்காளியாகி, பிரயாணத்தில் பங்கு கொள்கிறான். உங்களுக்குப் புரிகின்றதா? அப்பொழுது, அவன் அந்நியனும் சஞ்சாரியுமாகின்றான். அவன் எதை நோக்கி பிரயாணம் செய்கிறான்? தேவன் செய்த வாக்குத்தத்தத்தை நோக்கி. 25இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடைவதற்கு முன்பு பிரயாணம் செய்தனர். இதை புரிந்து கொள்ளுங்கள். அங்கு தான் நசரீன்களும், யாத்திரீக பரிசுத்தருமாகிய, நீங்கள் விழுந்து போனீர்கள், இஸ்ரவேல் ஜனங்கள் காதேஸ் பர்னேயாவை அடைந்தவுடன், வேவுகாரர்கள் கடந்து சென்று, திரும்பி வந்து, ''தேசம் மிகவும் நன்றாயுள்ளது'' என்றனர். அவர்களில் பலர், ''அந்த தேசத்தை நாம் கைப்பற்ற முடியாது. ஏனெனில், அந்த பட்டினங்கள் அரணிப்பானவைகளாய் இருக்கின்றன'' என்றனர். ஆனால் யோசுவாவும், காலேபும், ''நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்'' என்றனர். அவர்கள், ஏற்கனவே கையொப்பமிட்டுள்ள சாசனத்தின் காரணமாக கிருபையின் இரண்டு கிரியைகளை மாத்திரமே விசுவாசித்தனர். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல். எனவே, அவர்களால் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. கவனியுங்கள். அந்த சந்ததி முழுவதுமே வனாந்தரத்தில் அழிந்து போனது. ஆனால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்று அது நல்ல தேசம் என்னும் அத்தாட்சியைக் கொண்டு வந்த இருவர், “நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம். ஏனெனில், அது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது என்றனர். எனவே, ஜனங்கள் முன்னேறிச் சென்று பரிசுத்த ஆவியைப் பெற்று, அந்நிய பாஷை பேசி தேவனுடைய வல்லமையைப் பெற்று, அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்வதற்குப் பதிலாக, அது அவர்களுடைய பாரம்பரியப் போதனைகளை குலைத்துப் போடும் என்று எண்ணினர். என்ன நேர்ந்தது? அவர்கள் வனாந்தரத்தில் அழிந்து போயினர். அது உண்மை. 26ஆனால், விசுவாசிகளாகிய காலேபும், யோசுவாவும் வாக்குத்தத்தத்தை நோக்கி நடந்து, தேசத்தை அடைந்து அதை சுதந்தரித்துக் கொண்டு, அதில் தங்கினர். எனவே, நாம் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் இவைகளுடன் நின்றுவிடக் கூடாது. நாம், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கும் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் ஞானஸ்நானம் பெற்று இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதுடன் நின்றுவிட வேண்டாம். நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து அவர் நம்மை சுத்திகரித்தார் என்பதற்காக, நாம் நம்முடைய ஸ்தானத்தை, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் வாக்குத்தத்தத்தை அடைய வேண்டியவர்களாயிருக்கிறோம். பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு, “வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றான்.. 27எனவே, எபேசியர் நிருபம் யோசுவாவின் புத்தகத்தைப் போல் நம்மை ஸ்தானத்தில் பொருத்துகிறது. யோசுவா தேசத்தை சுதந்தரித்துக் கொண்ட பின்பு. “எப்பிராயீமுக்கு இங்கே, மனாசேக்கு இங்கே, காத்துக்கு இங்கே, பென்யமீனுக்கு இங்கே'' என்று தேசத்தைப் பங்கிட்டுக் கொடுத்தான் என்பதை கவனித்தீர்களா? கவனியுங்கள்! இது நம் இருதயத்தை ஜுவாலை மூட்டுகிறது. ஒவ்வொரு எபிரெயத் தாயும், அவளுடைய பிரசவத்தின் போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் அந்த குழந்தை எந்தயிடத்தில் இருக்கும் என்பதைக் கூறினாளாம். ஓ, அது ஒரு பெரிய ஆராய்ச்சி, அந்த விபரங்களையெல்லாம் கூறப்போனால் மணிக்கணக்காகும். நமது சபை கட்டிடம் கட்டி முடிந்த பின்பு, ஓரிரண்டு மாதம் இதைக் குறித்து பிரசங்கிக்க விரும்புகிறேன். கவனியுங்கள், ஒவ்வொரு தாயும் தன் பிரசவத்தின் போது, ''எப்பிராயீம்'' என்று கூப்பிட்ட போது, அவனுடைய கால்கள் எங்கு படவேண்டுமென்று அவனுடைய ஸ்தானத்தை அவள் நிர்ணயித்தாள். அப்படியே ஒவ்வொருவரும் செய்தனர். இதை அறியாத யோசுவா, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்த பிறகு, பரிசுத்த ஆவியின் ஏவுதலினால், ஒவ்வொரு மனிதனுக்கும் பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பிறப்பின் போது அவனுக்கு என்ன வாக்களித்தாரோ, அதையே அவனுக்கு அளித்தான். 28அவர்களுடைய பிரசவ வேதனையின் மூலமாய் சிலரை தேவன் எவ்வாறு சபையில் நியமித்துள்ளார். சில சமயங்களில் அது மிகவும் வல்லமை பொருந்தினதாயுள்ளது. சபையானது வெளிப்புற உலகின் உபத்திரவங்களின் காரணமாக வேதனைப்படும் போது; சபையானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, பரிசுத்த ஆவியைக் குறித்த வாக்குத்தத்தம், பெந்தேகோஸ்தே நாளில் எவ்வளவு உண்மையாயிருந்ததோ, அவ்வளவு உண்மையாக, அது நமக்கு இருந்து வரும் இக்காலத்தில், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிறந்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் சபையில் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை போதகராகவும், சிலரை மேய்ப்பராகவும், சிலரை சுவிசேஷகராகவும் ஏற்படுத்தினார். பின்பு, அவர் சபைக்கு அந்நிய பாஷை பேசும் வரத்தையும், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல், ஞானம், அறிவு, சுகமாக்கும் வரங்கள். அற்புதங்கள் செய்தல் போன்றவைகளை அளித்தார்.'' 29சபை எங்குள்ளது என்பதைக் (காண்பிப்பதே என் நோக்கமாயுள்ளது), சபையிலுள்ளவர்கள் மற்றொருவரின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முயலுகின்றனர். அப்படி செய்ய வேண்டாம். நீங்கள் மனாசே கோத்திரத்தை சேர்ந்தவர்களாயிருந்தால், எப்பிராயீமின் நிலத்தில் தானியத்தை விதைக்கக் கூடாது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் உங்கள் ஸ்தானத்தை வகிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். ஓ, நாம் அதற்கு வரும்போது அது மிகவும் ஆழமான செய்தியாகிவிடுகிறது. தேவன் எவ்வாறு சபையில் ஒருவருக்கு அந்நிய பாஷை பேசும் வரத்தை அளிக்கிறார் என்றும்... ''நாம் எல்லோருமே அந்நியபாஷை பேச வேண்டும்'' என்று அநேகமுறை நாம் போதிக்கப்பட்டுள்ளோம். அது தவறு. எல்லோருமே அந்நியபாஷை பேச வேண்டியதில்லை. ஒரே காரியத்தை எல்லோருமே அக்காலத்தில் செய்யவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியே.... 30ஒவ்வொரு நிலமும் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் எங்கே இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டதோ, அங்கே அவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது என்பதை நான் வேதவாக்கியங்களைக் கொண்டு உங்களுக்கு காண்பிக்க முடியும்... எப்படி இரண்டரை கோத்திரங்களும் நதிக்கு இப்புறம் இருக்க வேண்டுமென்றும், அவர்களுடைய பிறப்பின் போது அவர்களுடைய தாய்மார்கள் அதைக் கூறி பிரசவித்தார்கள் என்றும். நீங்கள் உள்ளே வந்த பின்பு சண்டை, தொல்லை எதுவுமில்லை என்று அர்த்தமில்லை. நீங்கள் நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் நீங்கள் யுத்தம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். எனவே, கானான் பரலோகத்துக்கு அடையாளமல்ல. ஏனெனில் கானானில் யுத்தங்களும், தொல்லைகளும், கொலைகளும், போராட்டங்களும் நேர்ந்தன. அது தேவனுடைய பரிபூரணமாக சஞ்சரிக்கும் ஒரு நிலைக்கு எடுத்துக் காட்டாயுள்ளது. 31தேவனுடன் நடந்து அவருடன் சஞ்சரிக்கும் விஷயத்தில் சபை இன்று தவறியுள்ளது. உங்கள் நடத்தையே வேறொருவர் சுகம் பெறுவதற்கு தடங்கலாயிருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? விசுவாசிகளாகிய நீங்கள் அறிக்கை செய்யாத உங்கள் பாவங்கள் இந்த சபை தோல்வியடைய காரணமாயிருக்கும். நியாயத்தீர்ப்பின் நாளில் அவை ஒவ்வொன்றிற்கும் நீங்கள் உத்திரவாதமாயிருப்பீர்கள். ''ஒரு நிமிடம் பொறும், சகோ. பிரன்ஹாமே'' என்று நீங்கள் கூறலாம். ஆனால், அது உண்மை. அதை சற்று யோசித்து பாருங்கள். யோசுவா கடந்து சென்று தேசத்தை அடைந்தவுடன், தேவன் அவனுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அளித்தார்... இதை சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு மனிதனையும் கூட போரில் இழக்காமல், ஒரு கீறலும் கூட யாருக்கும் நேராமல், முதற்சிகிச்சை எதுவும் இராமல் போரில் வெற்றி பெறுவது என்பது. தேவன் அவனிடம், ''தேசம் உங்களுடையது. நீங்கள் சென்று, போர் செய்யுங்கள்“ என்றார். செஞ்சிலுவை எதுவும் அருகில் இராமல் போர் செய்து, போரில் யாருமே காயமடையாமல் இருப்பதென்பது! 32அவர்கள் அமலேக்கியரையும், ஏத்தியரையும் கொன்று போட்டனர் பாவம் பாளயத்தில் பிரவேசிக்கும் வரை, அவர்களில் ஒருவராவது போரில் காயப்படவில்லை. ஆகான், பாபிலோனிய சால்வையையும், பொன்பாளத்தையும் எடுத்து கூடாரத்தின் மத்தியில் மறைத்து வைத்தபோது, அடுத்த நாளில் அவர்களில் பதினாறு பேரை அவர்கள் இழந்து போனார்கள். யோசுவா, ''நிறுத்துங்கள், நிறுத்துங்கள், ஒரு நிமிடம் பொறுங்கள், எங்கோ தவறுள்ளது. இங்கு எங்கோ தவறுள்ளது. நாம் ஏழு நாட்கள் உபவாசம் செய்யப் போகிறோம். தேவன், ''யாரும் காயப்பட மாட்டார்கள்'' என்றும், ''நமது எதிரிகள் நமது காலடிகளில் விழுவார்கள்'' என்றும் வாக்களித்திருக்க, இது எப்படி சம்பவித்தது? எங்கோ தவறுள்ளது எங்கோ தவறு நேர்ந்துள்ளது. ஏனெனில், நம்மில் பதினாறு ஆட்கள் மாண்டு போயினர்'' என்றான். 33அந்த குற்றமற்ற ஜனங்கள் ஏன் மாண்டு போயினர்? ஒரு மனிதன் வழியை விட்டு விலகி சென்ற காரணத்தால், இது சபைக்குப் போதிக்கப்பட வேண்டிய அவசியத்தை நீங்கள் காண்கிறீர்களா? சபையானது தேவனுடைய வார்த்தையுடனும், தேவனுடனும், ஒவ்வொருவருடனும் இணைந்து, எல்லோர் முன்பாக நேர்மையாகவும், பயபக்தியாயும், தேவனுக்கு பயந்து நடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு மனிதன் சால்வையைத் திருடி , அவன் செய்யக் கூடாததை செய்த காரணத்தால், பதினாறு பேர் அங்கு உயிர் இழக்கின்றனர். அது பதினாறு பேர் என்று நினைக்கிறேன். அதிகமாகவும் இருக்கலாம். யோசுவா அவர்களை அழைத்து, ''எங்கோ தவறு நேர்ந்துள்ளது. தேவன் வாக்கருளியிருந்தாரே! எங்கோ தவறுள்ளது'' என்றான். நாம் பிணியாளிகளைக் கொண்டு வந்து, அவர்கள் சுகமாகவில்லை யென்றால், நாம் சபையை ஒன்று கூட்டி உபவாசத்தை ஆசரிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில், எங்கோ தவறுள்ளது. தேவன் வாக்களித்திருக்கும் போது, அதை நிறைவேற்ற வேண்டியவராயிருக்கிறார். அவர் அதை நிச்சயம் செய்வார். 34அவன் உபவாசம் செய்யும்படி கூறினான். அவர்கள் தவறு என்னவென்பதைக் கண்டு பிடித்தனர். அவர்கள் சீட்டு போட்டனர். ஆகான் தன் பாவத்தை அறிக்கையிட்டான். அவர்கள் ஆகானையும் அவன் குடும்பத்தினரையும், அவன் உடமைகளையும் சுட்டெரித்து, அதை அங்கு ஞாபகச் சின்னமாக வைத்தனர். யோசுவா மீண்டும் போர் தொடங்கி, ஒரு கீறலும், காயமும் யாருக்கும் ஏற்படாமல், எல்லாவற்றையும் கைப்பற்றினான். 35ஒரு நாள் அவனுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது. அவனுடைய ஜனங்கள் இரவு நேரத்தில் நன்றாக போர் செய்ய முடியாது. அந்த மகத்தான வீரனான யோசுவா, தேவனுடைய அபிஷேகத்தைப் பெற்றவனாய், எபேசியர் புத்தகத்தில் புதிய ஏற்பாட்டின் சபை எவ்விதம் பொருத்தப்பட்டுள்ளதோ, அவ்விதம் இஸ்ரவேல் ஜனங்களை கானானில் வெவ்வேறு இடங்களில் பொருத்துவதற்காக அதைக் கைப்பற்ற போர் செய்து கொண்டிருந்தான் அவனுக்கு சற்று அதிக நேரம் தேவைப்பட்டது. அவன், ''சூரியனே தரித்து நில்'' என்றான். (யோசுவா; 10:12). அவன் தேசத்தைக் கைப்பற்றும் வரைக்கும், ஏறக்குறைய பன்னிரண்டு மணி நேரம், அது தரித்து நின்றது. பாருங்கள்? 36இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்த தேசத்தில் பொருத்தப்பட்டது போன்று, எபேசியர் புத்தகம் நம்மை கிறிஸ்துவுக்குள், நமது ஸ்தானத்தில் பொருத்துகின்றது. நாம் பரிசுத்த தேசத்தில் பொருத்தப்படவில்லை. ஆனால், பரிசுத்த ஆவியில் பொருத்தப்படுகிறோம். நாம் சில வேத வாக்கியங்களைப் படித்து, சபை எவ்வளவு பரிபூரணமாயுள்ளது என்பதை அறிந்து கொள்வோம். தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்... ஓ, அது எனக்கு மிகவும் பிரியம். தேவன் அவனை அப்போஸ்தலனாக்கினார். எந்த மூப்பர்களும் அவன் மேல் கைகளை வைக்கவில்லை. எந்த பேராயரும் அவனை எங்கும் அனுப்பவில்லை. தேவனே அவனை அழைத்து அப்போஸ்தலனாக்கினார். தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு (பரிசுத்தமாக்கப் பட்டவர்களுக்கு) எழுதுகிறதாவது: இந்த நிரூபத்தை அவன் யாருக்கு எழுதுகிறான் என்று கவனியுங்கள். இது அவிசுவாசிக்கல்ல, சபைக்கு எழுதப்படுகிறது. அழைக்கப்பட்டு கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு இது எழுதப்படுகிறது. 37நாம் எவ்வாறு கிறிஸ்து இயேசுவுக்குள் வருகிறோம் என்று அறிய விரும்பினால் 1.கொரிந்தியர்;12க்கு திருப்புங்கள்: ''நாம் எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு.....'' எப்படி? எதனால் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்? பரிசுத்த ஆவியினால். ''கிறிஸ்து சபை ஸ்தாபனத்தவரே, தண்ணீர் ஞானஸ்நானத்தினால் அல்ல, ஒரே ஆவியினால். ஒரே கை குலுக்குதலினால் அல்ல, ஒரு கடிதத்தின் மூலமாய் அல்ல, தெளித்தலின் மூலமாய் அல்ல. ஆனால், ஒரே ஆவியினாலே நாம் எல்லோரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். அது தான் தேவன். நாம் வசிப்பதற்கென கொடுத்த தேசம், பரிசுத்த ஆவி. யூதர்கள் வசிப்பதற்கு அவர் கானான் தேசத்தைக் கொடுத்தது போல், நமக்கு அவர் பரிசுத்த ஆவியைத் தந்திருக்கிறார். ஒரே ஆவியினாலே நாம் எல்லோரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். உங்களுக்கு புரிகிறதா? 38தேசத்தை சுதந்தரித்துக் கொண்ட ஆவிக்குரிய இஸ்ரவேலருடன் அவர் பேசி கொண்டிருக்கிறார். எகிப்திலுள்ள வெள்ளைப் பூண்டை விட்டு வந்ததைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?நீங்கள் வனாந்தரத்தை விட்டு வந்ததைக் குறித்து உங்களுக்கு சந்தோஷம் அல்லவா?அவர்கள், தேசத்தில் சேரும் வரைக்கும், வானத்திலிருந்து விழுந்த தூதர்களின் அப்பமாகிய மன்னாவைப் புசிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் தேசத்தை அடைந்தவுடன், மன்னா பெய்யாமல் அடைபட்டது. அப்போது, அவர்கள் முதிர்வடைந்துவிட்டனர். தேசத்தின் தானியத்தை அவர்கள் புசிக்கத் தொடங்கினர். ''நீங்கள் இன்னும் குழந்தைகள் அல்ல, நீங்கள் இப்பொழுது முதிர்ந்த கிறிஸ்தவர்களாகி விட்டதால், சுவிசேஷத்தின் ஞானப்பாலை நீங்கள் இப்போது வாஞ்சிப்பதில்லை. நீங்கள் சபைக்கு செல்ல வேண்டுமென்று யாரும் உங்களைத் தட்டிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது, நீங்கள் பலமான ஆகாரத்தை உண்ண ஆயத்தமாயிருக்கிறீர்கள். ஆழமான போதகங்களை நீங்கள் புரிந்து கொள்ள ஆயத்தமாயிருக்கிறீர்கள். நேரடியாக நாம் அதற்கு இப்பொழுது செல்ல முடியும். அவை உலகத்தோற்றத்துக்கு முன் மறைக்கப்பட்ட இரகசியங்களாக இருந்து வந்துள்ளன. நீங்கள் இதற்குள் வந்துவிட்டதால், இவைகளை உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன்'' என்று யோசுவா கூறியிருப்பான். இது எகிப்தை இப்பொழுது தான் விட்டவர்களுக்கல்ல, அல்லது இன்னும் பிரயாணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கல்ல, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை ஏற்கனவே அடைந்து, வாக்களிக்கப்பட்டதை, ஏற்கனவே பெற்று கொண்டவர்களுக்கு மாத்திரமே இது உரியது. 39உங்களில் எத்தனை பேர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறீர்கள்? ஓ, நீங்கள் இப்பொழுது தேசத்தில் இருந்து கொண்டு முதற் தானியங்களைப் புசிப்பதைக் குறித்தும், தேவனுடைய பலமுள்ள காரியங்களைப் புசித்து எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து கொண்டிருப்பதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் ஆவிக்குரிய சிந்தை குழம்பியிருக்கவில்லை. அவர் யாரென்பதை தெளிவாய் அறிந்திருக்கிறீர்கள்: நீங்கள் விசுவாசிக்கிறவர் இன்னார் என்றும் நீங்கள் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்றும் நிச்சயத்திருக்கிறீர்கள். ஓ, அவரைக் குறித்துதான் பவுல் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறான். கூர்ந்து கவனியுங்கள். ''....கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற....'' 40சபை இதை திரும்பவும் கூறும்படி செய்யப்போகிறேன். நாம் எவ்வாறு கிறிஸ்து இயேசுவுக்குள் வருகிறோம்? ஒரு ஸ்தாபனத்தை சேர்வதன் மூலமா? இல்லை, ஒரு புத்தகத்தில் நமது பெயரை எழுதுவதனாலா? இல்லை. தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் பெறுவதன் மூலமா? இல்லை. அப்படியானால் நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் வருகிறோம்? ஒரே பரிசுத்த ஆவியினால் நாம் எல்லாரும் அந்த ஒரே வாக்குத்தத்தமாகிய சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அந்த தேசத்திற்குரிய அனைத்தையும் அனுபவிக்கிறோம். ஆமென். ஓ, அது எனக்கு மிகவும் பிரியம், என் தொண்டை இப்பொழுது கரகரப்பாய் இல்லாமல் போனால், நான் கூச்சலிடுவேன். அந்த தேசத்தை நான் அடைந்தவுடன், அது என்னுடையதாகி விடுகிறது. நான் என் வீடாகிய கானானுக்கு வந்துவிட்டேன். கர்த்தர் என்னை எதற்காக உபயோகிக்க சித்தம் கொண்டிருக்கிறாரோ, அதற்கு நான் கீழ்ப்பட்டவன், நான் ராஜாவின் பிள்ளையாக, அங்கியைத் தரித்துக்கொண்டு, ஆயத்தமாகி, பரிசுத்த தரையில் நடந்து கொண்டிருக்கிறேன். நான் எகிப்தை விட்டு வெளிவந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி பிரயாணம் செய்து, சோதனைகளையெல்லாம் மேற்கொண்டு, யோர்தானைக் கடந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்துவிட்டேன். ஓ, நான் எவ்வாறு அங்ஙனம் செய்தேன்? ஒரே ஆவியினால். பவுலும் அதே விதத்தில் தான் அதை பெற்றுக் கொண்டான். அது எவ்விதமாக அவன் மீது கிரியை செய்ததோ, அவ்விதமாகவே என் மீதும் உங்கள் மீதும் கிரியை செய்தது. ஒரே ஆவியினாலே, நாம் எல்லோரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். நாம் அதனடியில் மூழ்க்கப்பட்டோம், நாம் எல்லாரும் பரிசுத்த ஆவியில் நீந்த வேண்டியவர்களாயிருக்கிறோம். அது தான் நமக்களிக்கப்பட்ட வாக்குத்தத்தம். 41நமது பரிசுத்த ஆவியாகிய யோசுவா, ''யோசுவா என்னும் சொல்லுக்கு இயேசு, இரட்சகர் என்னும் அர்த்தமுண்டு.'' யோசுவா எவ்வாறு மாமிசப்பிரகாரமாக இஸ்ரவேலருக்கு மகத்தான போர் வீரனாகத் திகழ்ந்தானோ அதேபோன்று பரிசுத்த ஆவியானவர், ஆவிக்குரிய விதமாக நமக்கு இருக்கிறார். அவரே, நமது மகத்தான தலைவர், தேவன் யோசுவாவுடன் இருந்தது போன்று, இன்று பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நம்மை அசைத்துக் கொண்டிருக்கிறார், பாவம் பாளயத்துக்குள் பிரவேசிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் நிற்கும்படி கட்டளையிட்டு, ''சபையில் என்ன தவறுள்ளது? ஏதோ தவறுள்ளது'' என்று நாம் அறிந்து கொள்ளும் படி செய்கிறார். இன்று கீசின் குமாரர் அநேகர் நம்மிடையே உள்ளனர் என்று உங்களால் காண முடியவில்லையா? அநேக சவுல்கள் வேத பள்ளிலிருந்து, வெளி வந்து மாறுபாடானவைகளைப் போதிக்கின்றனர். அவர்கள், அவ்வாறு செய்வார்கள் என்று வேதம் உரைக்கின்றது. அவர்கள் விசுவாசமற்றவர்களாய் தங்களை உங்களிடமிருந்து பிரித்துக் கொண்டு, உங்களிடம் எவ்வித ஐக்கியமும் கொள்ளாமல், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிப்பார்கள். ''இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை அறியாதிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த காரணமும் கூற முடியாது. 42என் நண்பன் சகோ. பூத் கிளிப்போர்ன் கூறினதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தேவனுடைய சிருஷ்டிப்பில் இல்லாத, முறை தவறி பிறந்த ஏதாவதொன்று இவ்வுலகில் இருக்குமானால், அது தான் கோவேறு கழுதை. கோவேறு கழுதை எல்லாவற்றைக் காட்டிலும் மிக நீசமானது. அது யாரென்று தனக்கே தெரியாது. அது தன்னை தானே உற்பத்தி செய்துக்கொள்ள முடியாது. ஒரு கோவேறு கழுதை மற்றொரு கோவேறு கழுதையுடன் சேர்ந்து, இன்னுமொரு கோவேறு கழுதையைப் பிறப்பிக்க முடியாது. அதன் தந்தை யாரென்றும், தாய் யாரென்றும் அதற்கு தெரியாது. அவை முறையே கழுதையும் குதிரையுமாம். தேவன் கோவேறு கழுதையை சிருஷ்டிக்கவில்லை. அதை அவர் பேரில் சுமத்த வேண்டாம் தேவன் அப்படி ஒருக்காலும் செய்யவில்லை. ''ஒவ்வொன்றும் அதனதன் ஜாதியின் படியே தோன்றச் செய்யக்கடவது'' என்று அவர் கூறினார். ஆம் ஐயா, ஆனால் கோவேறு கழுதையின் தந்தை ஒரு கழுதை. அதன் தாய் ஒரு குதிரை, அது எந்த இனத்தைச் சார்ந்தது என்று அதற்கு தெரியாது. ஒரு நேரத்தில், அது குதிரையாக, ஆக முயலும் கழுதையைப் போலவும், வேறு நேரங்களில் கழுதையாக ஆக முயலும் குதிரையைப் போலவும் காணப்படும். கோவேறு கழுதைகள் பிடிவாதம் பிடித்தவைகள்: அவைகளை நம்பவே முடியாது. 43இன்று சபைகளிலும் அப்படிப்பட்ட அநேகர் உள்ளனர். அவர்கள் தந்தை யாரென்றோ, தாய் யாரென்றோ அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று அவர்கள் பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்தே போன்ற ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மாத்திரமே. அவர்கள் எங்கிருந்து வந்தார்களென்று அவர்களுக்கு தெரியாது. ஒரு கழுதையிடம் நீங்கள் உங்களால், முடிந்த அளவு எவ்வளவு தான் சத்தமிட்டு கத்தினாலும் அது உணர்வற்றதாய், அசையாமல் நின்று கொண்டிருக்கும். இரவு முழுவதும் அவர்களுக்கு நீங்கள் பிரசங்கம் செய்தாலும், அவர்கள் இடம் விட்டு செல்லும் போது, வந்ததைக் காட்டிலும் அதிகம் கற்றறிந்திருக்க மாட்டார்கள். அது உண்மை, நான் கடூரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை கூறவில்லை. உங்களுக்கு உண்மையை எடுத்துரைக்கவே விரும்புகிறேன். 44ஆனால், அவர்கள் எந்த ஒரு காரியத்தையும் மிக நன்றாய் செய்ய முடியும். அவர்கள் நன்கு பணி செய்பவர்கள். அவர்கள் பணி செய்து கொண்டேயிருப்பார்கள், கோவேறு கழதையைப் போல். இந்த கோவேறு கழுதைகள் தங்கள் கிரியைகளின் மூலம் பரலோகத்தை அடைய முயல்கின்றனர். அது உண்மை. ஓ, பெண்கள் உதவி சங்கம், கோழிக்கறி இரவு உணவு போன்றவைகளை நடத்தி பணம் சம்பாதித்து, அவர்கள் போதகர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றனர். ''நாம் இந்த நடனத்தை ஒழுங்கு செய்ய வேண்டும், இந்த விருந்தை ஆயத்தம் செய்ய வேண்டும்'' என்றெல்லாம் அவர்கள் கூறுகின்றனர். அது வேலை, வேலை, வேலை, வேலை என்பதல்லாமல் வேறல்ல. எதற்காக வேலை செய்கிறீர்கள்? அவர்களிடம், ''நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் கழுதைகளை போல் காதுகளை நீட்டி அசையாமல் நிற்பார்கள். அவர்கள் எங்கே போகிறார்களென்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள், ''நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? பரிசுத்த ஆவி என்றால் என்ன? அதைக் குறித்து நாங்கள் கேள்விப்படவேயில்லை. ஓ, நீர் மூடபக்தி வைராக்கியமுள்ளவர்'' என்பார்கள். பாருங்கள், அவர்கள் தந்தை யாரென்றோ, அவர்களுக்கு தெரியாது. நீங்கள் கோவேறு கழுதைக்குச் செய்வது போல் அவர்களை இங்கு அடிக்க வேண்டும், அங்கு அடிக்க வேண்டும். 45ஆனால், நல்ல ஜாதி குதிரைக்கு நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டிய அவசியமில்லை, சகோதரனே, அதை ஓரே முறை சாட்டையால் அடித்தால் போதும். அது பாய்ந்தோடும், அது என்ன செய்கிறதென்று அதற்கு தெரியும் நல்ல ஜாதிக் குதிரை ஒன்றின் மேல் சவாரி செய்வதென்பது எவ்வளவு இன்பமான செயல் அந்த குதிரையிடம், ''ஓடு'' என்று சொல்லிப் பாருங்கள். நீங்கள் கடிவாளத்தை இறுகப் பிடிக்காவிட்டால், சேணம் காற்றில் பறக்கும் அளவுக்கு அது அவ்வளவு வேகமாக ஓடும். 46நல்ல இன கிறிஸ்தவர்களும் அவ்வாறே உள்ளனர் அல்லேலூயா! ''பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்“ என்பதை கேட்ட மாத்திரத்தில் அவர்கள் விரைவில் தண்ணீரில் இறங்கி விடுவார்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும் வரைக்கும் அவர்கள் இரவும் பகலும் அயரமாட்டார்கள். ஏன்? ஒரு கிறிஸ்தவனுக்கு அவன் தந்தை யாரென்று தெரியும். ஒரு பிறப்பிற்கு இருவர் அவசியம் - தந்தை, தாய். கோவேறு கழுதைக்கு அதன் தந்தை, தாய் யாரென்றும் தெரியாது. ஆனால், நமக்கோ நமது தந்தையாரென்றும், தாய் யாரென்றும் தெரியும். ஏனெனில், நாம் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையின் மூலம் பிறந்து, ஆவியானவரால் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறோம். பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு, ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்றான். 47சகோதரனே, உண்மையாய் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனுக்கு பரிசுத்த ஆவி அவனுடைய ஆவியாகி விடுகிறது (ஓ, என்னே!). அவன் வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவனைக் கேட்டுப் பாருங்கள் அவன் எங்கு நிற்கிறான் என்பதை அறிந்திருக்கிறான் தெய்வீக சுகமளித்தலில் உனக்கு நம்பிக்கையுண்டா?'' ''ஆமென்!'' ''இரண்டாவது வருகையை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?'' ''ஆமென்!'' அதையே, ஒரு கோவேறு கழுதையைக் கேட்டுப் பாருங்கள், கோவேறு கழுதை மார்க்கம். ''எனக்கு தெரியாது. டாக்டர் ஜோன்ஸ் ஒரு சமயம் இப்படி கூறினார் என்று பதிலளிப்பான். சரி, நீ சவுலின் பின்னால் போ. பாருங்கள்? “ஓ, அவர்களுக்கு தெரியாது. என் சபைக்கு அதை குறித்து தெளிவாகத் தெரியாது'' என்றெல்லாம் கூறுவார்கள். ஓ, சகோதரனே, மறுபடியும் பிறந்த மனிதனும், ஸ்திரீயும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்து மிகவும் உறுதியுடையவர்களாயிருக்கின்றனர். பரிசுத்த ஆவி அருளப்படு மென்றும் அதை அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர் என்றும், அவர்கள் மிக உறுதியுடையவர்களாயிருக்கின்றனர். 48கிணற்றடியிலிருந்த அந்த சமாரியா ஸ்திரீ இயேசுவிடம், ''நாங்கள் இந்த மலையிலே தொழுது கொள்கிறோம். யூதர்கள், எருசலேமில் தொழுது கொள்கிறார்கள்'' என்றார். அவர், ''ஸ்திரீயே நான் சொல்லுகிறதைக் கேள். உண்மையாய்த் தொழுதுக்கொள்ளும் காலம் வரும். அது, இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுதுக் கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும் படி பிதாவானவர் விரும்புகின்றார். அவருடைய வசனமே சத்தியம். வேதாகமத்தை வாசித்து அது கூறும் ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசித்து, அது கற்பிப்பவைகளைப் பின்பற்ற வேதத்திலுள்ள மனிதர்கள் பெற்ற அதே பரிசுத்த ஆவியை, அவர்கள் பெற்ற அதே விதத்தில் பெற்று. அதே வல்லமையை அதனுடன் பெற்றுள்ள ஒவ்வொருவனுக்கும், அவனுடைய தந்தை யாரென்றும் தாய் யாரென்றும் தெரியும். அவன், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, ஆவியால் பிறந்து. அந்த மகத்தான அபிஷேகத்தைப் பெற்றிருக்கிறான் என்பதை அறிந்திருக்கிறான். அவன் எங்கு நின்று கொண்டிருக்கிறான் என்று, அவனுக்குத் தெரியும். நிச்சயமாக. அவன் கானானில் இருக்கிறான். அவன், எங்கிருந்து வருகிறான் என்றும் அவனுக்குத் தெரியும். உண்மையான ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்நிலையில் இருக்கிறான். ''நீ விசுவாசித்த பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றாயா?'' என்று அவனிடம் கேட்டுப் பாருங்கள்! ''ஆமென், சகோதரனே'' என்பான். 49அன்றொரு நாள், 80 வயது நிரம்பிய போதகர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, 92 வயதுள்ள ஒரு பரிசுத்த மணவாட்டியை சந்திக்க நேர்ந்தது. நான், ''போட்டியே?'' என்றேன். அவர்கள் பிரகாசமான முகத்துடன், ''என் மகனே?'' என்றார்கள். நான், ''நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று எவ்வளவு காலமாகிறது?'' என்று கேட்டேன். அவர்கள், ''தேவனுக்கு மகிமை! அறுபது ஆண்டுகளுக்கு முன் பெற்றுக் கொண்டேன்'' என்றார்கள். அவர்கள், கோவேறு கழுதையாக இருந்திருந்தால் சற்று பொறுங்கள், நான் தெளிப்பு ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தலில் பங்கு கொண்டேன். அவர்கள் என்னை சபையில் சேர்த்துக் கொண்டார்கள். நான் கடிதத்தை இன்னாரிடத்தில், ''ஓ, என் மீது இரக்கமாயிருப்பாராக.'' அப்படிப்பட்டவர்கள் தாங்கள் எங்கு சார்ந்திருக்கின்றனர் என்பதையும் கூட அறியாமலிருக்கின்றனர். ஆனால், இந்த அம்மாளோ அவர்கள் பிறப்புரிமை எங்கிருந்து வந்தது என்பதை அறிந்திருந்தார்கள். அதை பெற்றுக் கொண்ட அத்தருணத்தில் அவர்கள் அங்கிருந்தார்கள். அவர்கள் ஜலத்தினாலும், ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்கள். திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரிக்கப்படுவதற்கு வார்த்தை அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். 50இந்த நிருபம் யாருக்கு எழுதப்பட்டது என்பதைக் கவனியுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு. பவுல்.... நான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன். இந்த அதிகாரத்தை நான் முடித்துவிட வேண்டும்.... உங்களுக்கு அது பிடித்திருக்கிறதா? நாம் எங்குள்ளோம் என்பதை, அது எடுத்துக் காண்பிக்கிறது. ஆனால் ஒரே இரவில் அந்த அதிகாரத்தை முடிக்க முடியாது. நாம் ஒவ்வொரு இரவும் கூட்டம் நடத்தினால், வார்த்தைக்கு வார்த்தை தியானிக்க ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் செல்லும். நாம் பின் சென்று சரித்திரத்தை ஆராய்ந்து, இதனுடன் ஒப்பிட்டு, இது உண்மையென்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இந்த வசனத்தை நான் மீண்டும் விரைவாக படிக்கப் போகிறேன். தேவனுடைய சித்தத்தினாலே, (மனிதனுடைய சித்தத்தினால் அல்ல) இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: 51இவர்கள் வெளியே அழைக்கப்பட்டு, தனியாக பிரிக்கப்பட்டு, இப்பொழுது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றனர். என் அருமையானவர்களே, இந்நிரூபத்தை உங்களுக்கு எழுதுகிறேன், ''ஓ! பவுல் அவர்களுடன் இருந்த காலத்தை இப்பொழுது கற்பனை செய்து பார்க்கிறேன். அங்கே, அந்த சிறிய வயதான அப்போஸ்தலனுடைய தலை கீழே விழும்படி வெட்டப்பட்டது. எங்கே அவன் தலை வெட்டப்பட்டதோ, அந்த இடத்தில் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். ஆனால், அந்த தலை அந்த புதிய சரீரத்தின் மீதுள்ளது. இனிமேல், மறுபடியும் வெட்டப்படாது. அந்த அப்போஸ்தலன் அவர்களுடன் அக்கரையில் நின்று கொண்டிருக்கிறான். ''கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களே, ஒரே ஆவியனாலே நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்'' என்று அவன் எழுதினான். இப்பொழுது கவனியுங்கள்! நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும், உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (சார்லி, அதைக் கேட்டீர்களா?) 52அப்போஸ்தலர்களுக்கு சிறிது ஆசிர்வாதம், மற்றவர்களுக்கு சிறிது ஆசிர்வாதம் என்றல்ல. அவர், சகல ஆசிர்வாதத்தினாலும், நம்மை ஆசிர்வதித்திருக்கிறார். பெந்தேகோஸ்தே நாளன்று விழுந்த பரிசுத்த ஆவிதான் இன்றிரவு இங்குள்ள பரிசுத்த ஆவி மிரியாம் கூச்சலிட்டு, அந்நியபாஷை பேசி, கர்த்தருக்குள் சந்தோஷமான நேரத்தை கழிக்கச் செய்த அதே பரிசுத்த ஆவிதான் இன்றிரவு நம்மிடையேயுள்ளது. அதே பரிசுத்த ஆவிதான் நீர் நிரம்பிய பழைய கப்பலிலிருந்த பவுலை சந்தித்தது. இரவும், பகலும் பதினான்கு நாட்கள் சந்திரனோ, நட்சத்திரங்களோ அப்பொழுது வானத்தில் காணப்படவில்லை. அங்கு பார்த்த போது ஒவ்வொரு அலையின் மீதும் பிசாசு புகுந்து நடனமாடிக் கொண்டு, பற்களை கடித்துக் கொண்டு அவனை, நான் எப்படியாவது மூழ்கடித்து விடுவேன். அந்த கிழப்பையன் என் கையில் அகப்பட்டுக் கொண்டான்'' என்று ஆரவாரம் செய்து கொண்டிருந்தது. 53சிறு ஜெபம் ஒன்றை ஏறெடுப்பதற்கு பவுல் சென்ற போது, அங்கு தேவதூதன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் பவுலை நோக்கி, ''பவுலே, இந்த பழைய கப்பலானது ஒரு குறிப்பிட்ட தீவில் தரைதட்டும். நீ சென்று இரவு உணவை சாப்பிடு. இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது'' என்றான். பவுல், தன் கைகளும், கால்களும் சங்கலிகளால் கட்டப்பட்டவனாய், கால்களை இழுத்துக் கொண்டே நடந்து வந்து ''மனிதரே, திடமனதாயிருங்கள். ஏனெனில், நான் சேவிக்கிற தேவனுடைய தூதனானவன் என்னிடத்தில் வந்து நின்று பவுலே, பயப்படாதே'' என்று சொன்னான்'' என்றான், அதே பரிசுத்த ஆவியானவர், அதே, தேவனுடைய ஆவியானவர், இன்றிரவு அதே ஆவிக்குரிய ஆசிர்வாதங்களை நமக்கு அருளுகிறார். ...உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்... 54ஓ, இன்னும் ஒரு நிமிடம் இதில் நிலைத்திருப்போம். ''உன்னதங்களிலே,'' எங்கோ ஓரிடத்தில் அல்ல, ''உன்னதங்களில்.'' நாம் உன்னதங்களில் ஒன்று கூடியிருக்கிறோம். அதுதான் விசுவாசியின் ஸ்தானம் எனக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்டுவிட்டது. உங்களுக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்டுவிட்டது. சபைக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்டுவிட்டது. நாமெல்லாரும் செய்தியை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகிவிட்டோம். நாம் வெளியே அழைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்களாய், தேவனுடைய ஆசிர்வாதத்தினால் நிறைக்கப்பட்டு, அதற்கென்று தெரிந்து கொள்ளப்பட்டு பரிசுத்தவான்களாக ஒன்று கூடி, இப்பொழுது உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், நமது ஆத்துமாவில் நாம் பரலோகத்தை சேர்ந்தவர்களாயிருக்கிறோம். ஓ, சகோதரனே! பரலோகத்தின் சூழ்நிலை. நாம் பரலோக சூழ்நிலையில் உட்கார்ந்து கொண்டிருந்து புதிதாக்கப்பட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாயுள்ள நம் ஒவ்வொருவருடைய புதிதாக்கப்பட்ட இருதயத்திலும் பரிசுத்த ஆவியானவர் இன்று அசைவாடினால் என்னமாயிருக்கும்? நமது பாவங்கள் அனைத்தும் இரத்தத்தின் கீழ் வைக்கப்பட்டு நம் பரிபூரண ஆராதனையுடன் நமது கரங்களையும் இருதயங்களையும் தேவனிடத்தில் ஏறெடுத்து, உன்னதங்களில் ஒருமித்து உட்கார்ந்து கொண்டு, உன்னதங்களில் ஒருமித்து அவரை நாம் சேவித்துக் கொண்டிருக்கிறோம்! அப்படிப்பட்ட ஒன்றில் நீங்கள் எப்பொழுதாகிலும் பங்கு கொண்டிருக்கிறீர்களா? நான் ஆனந்த கண்ணீர் சிந்தி, ''தேவனே, இங்கிருந்து சென்று விட அனுமதியாதேயும்'' என்று கூறினதுண்டு. கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே அவரோடே கூட உட்கார்ந்திருத்தல். 55அவர் எதனால் நம்மை ஆசிர்வதித்திருக்கிறார்? தெய்வீக சுகமளித்தல். முன்னறிதல், வெளிப்பாடு, தரிசனம், வல்லமை, அந்நியபாஷை பேசுதல், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல், அறிவு உன்னதங்களிலுள்ள சகல ஆசிர்வாதங்கள், சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷம், ஒவ்வொரு இருதயமும் ஆவியினால் நிறைந்து ஒருமித்து நடந்து, உன்னதங்களில் ஒருமித்து உட்கார்ந்திருத்தல், நம்மிடையே எவ்வித பொல்லாத சிந்தனையுமின்றி ஒரு சிகரெட் கூட பிடிக்காமல், ஒரு குட்டை ஆடை கூட அணியாமல், இது அது மற்றது ஒன்றுமில்லாமல், ஒருவருக்கு விரோதமாக மற்றவர் எதையும் கொண்டிராமல், எல்லோரும் ஒருவரோடொருவர் அன்புடனும், இசைவுடனும் பேசி, எல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் போது, ''பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாக ஒரு முழக்கமுண்டானது. அதுதான். ''உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.'' 56அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் யார் மேலாவது இறங்கி, ''கர்த்தர் உரைக்கிறதாவது இன்னின்ன இடத்திற்கு சென்று இன்னின்னதை செய் நீங்கள் காண்பீர்கள். ''கர்த்தர் உரைக்கிறதாவது இன்னின்ன இடத்திற்கு சென்று இன்னின்னதை செய்.'' அது பிழையின்றி நிறைவேறுவதை நீங்கள் காண்பீர்கள். அவர், கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதிக்கிறார். ''கவனியுங்கள்.'' அவர்... நம்மைத் தெரிந்து கொண்டபடியே நாம் அவரைத் தெரிந்து கொண்டோமா? அவர் நம்மைத் தெரிந்து கொண்டாரா? அவர் நம்மை தெரிந்து கொண்டார். எப்பொழுது? நாம் அவரை ஏற்றுக் கொண்ட அந்த இரவிலா? தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே... 57தேவன் எப்பொழுது நம்மைத் தெரிந்து கொண்டார்? பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள உங்களை தேவன் எப்பொழுது தெரிந்து கொண்டார்? அவர் எப்பொழுது உங்களை தெரிந்து கொண்டார்? உலகத் தோற்றத்து முன்னே (ஒலிநாடாவில் காலி இடம்... ஆசி). அவர் உங்களை தெரிந்து கொண்டார். உங்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாக, அவர் இயேசுவை அனுப்பி உங்களை அவருடன் ஒப்புரவாக்கி கொண்டார். ஓ, இன்னும் சில நிமிடங்கள் இதில் நிலைத்திருக்க நேரமிருந்தால் நலமாயிருக்கும்! 58நான் தொடர்ந்து செல்வற்கு முன்பாக, சற்று முன்பாக சற்று பின் சென்று, ஆதி;1:26ஐப் பார்ப்போம். அதைக் குறித்து நான் புதன்கிழமை பேசவிருக்கிறேன். தேவன் மனிதனை உண்டாக்கின போது... அவர் மனிதனை உண்டாக்குவதற்கு முன்பு, தம்மை ''ஏல்,'' ''ஏலா,'' ''ஏலோகிம்,'' ''தன்னில் தான்'' (self existence) என்னும் அர்த்தம் கொண்டது... எல்லாம் தாமாகவே. அவருக்கு முன்பு எதுவும் இருக்கவில்லை. அவர் மாத்திரமே தனிமையில் வாழ்ந்து வந்தார். ''ஏல்'', ''ஏலா,'' ''ஏலோகிம்,'' என்றால், ''எல்லாம் போதுமான, எல்லாம் வல்ல, சர்வவல்லமை கொண்ட, தனிமையில் வாழ்பவர்'' என்று பொருள். 59ஆனால், ஆதியாகமம்;2ல் அவர் மனிதனை சிருஷ்டித்த போது, ''நான் யேகோவா'' என்றார். அதன் அர்த்தம் என்ன? “தனிமையில் வாழ்ந்த நான் என்னிலிருந்து, ஏதோ ஒன்றை எனக்கு குமாரனாயிருக்கும் படி, தற்காலிகமாக சிறிய ஒருவனை சிருஷ்டித்துக் கொண்டேன்.'' மகிமை! ஏன்?... ''யேகோவா'' என்றால் அவர் மனிதனுக்கு, ''சிறு தேவன்'' (amateur god) என்று பொருள். அவர் பிதாவாக, தேவனாக, இருக்கிறபடியால், அவர் மனிதனை உண்டாக்கினார். பூமி மனிதனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அது, வேத வாக்கியங்களுடன் பொருந்துகிறதா? பூமிக்கு தேவன். அவன் உரைப்பது எதுவோ, அது நிறைவேறும். அவன் அதை உரைத்தால், அது நிறைவேறும். யேகோவா தேவன், ஒரு காலத்தில் தனிமையில் வாழ்ந்தவர். இப்பொழுது தமது குடும்பத்துடன், பிள்ளைகளுடன் வாழ்கின்றார். 60இதைக் குறித்து நாம் புதன் இரவு பார்ப்போம். இப்பொழுது, நமக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் மாத்திரமேயுள்ளன. ''வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள்'' என்று எழுதப்பட்டுள்ள இடத்திற்கு வர வேண்டுமென்று எண்ணினேன். சரி. 61நாம் எப்பொழுது தேவனுடைய ஊழியர்களாகும் படி அழைக்கப்பட்டோம்? தேவனுடைய ஊழியக்காரனாகும் படி, ஆர்மன் நெவில் எப்பொழுது அழைக்கப்பட்டார்? ஓ, என்னே! அது என்னை திணற வைக்கிறது. நாம் சில வேதாவாக்கியங்களைப் பார்ப்போம். நீங்கள், 1.பேதுரு; 1:20ஐ எடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன். பாட், நீங்கள் வெளி; 17:8ஐ எடுங்கள். இந்த வசனங்கள் என்ன கூறுகின்றன என்று நாம் கேட்க விரும்புகிறோம். உங்களைத் தேவன் எப்பொழுது கிறிஸ்தவனாகும்படி அழைத்தார் என்று நாம் கேட்க விரும்புகிறோம். உங்களைத் தேவன் எப்பொழுது கிறிஸ்தவனாகும்படி அழைத்தார் என்று நீங்கள் அறிய விரும்புகிறீர்கள் அல்லவா? ஓ, இந்த வசனம் எனக்கு மிகவும் பிரியம்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' என்னும் வசனம் (மத்; 4:4). சரி சகோ. நெவில், 1.பேதுரு; 1:20ஐ எடுத்துவிட்டீர்களா? 19, 20 வசனங்களைப் படியுங்கள் இதை கவனியுங்கள். (சகோ. நெவில், 1.பேதுரு 1:19, 20ஐப் படிக்கிறார் - ஆசி ) குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசி காலங்களில் வெளிப்பட்டார். 62அவர் எப்பொழுது குறிக்கப்பட்டார்? உலகத் தோற்றத்திற்கு முன்னே. சகோ. பாட், எனக்காக வெளி;17:8ஐ வாசியுங்கள். (சகோ. பாட், வெளி;17:8ஐ வாசிக்கிறார் - ஆசி) நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து நாசமடையப் போகிறது. உலகத்தோற்ற முதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். யார் வஞ்சிக்கப்படப் போவது? சவுலைப் போன்ற இந்த பக்தியுள்ளவனைக் கண்டு வஞ்சிக்கப்படப் போகிறவர்கள் யார்? அது மிகவும் தந்திரமுள்ளதும், பூரணமாயிருந்து கூடுமானால் யாரை வஞ்சிக்கும்? (சபையோர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களை என்று பதிலளிக்கின்றனர்.) கூடுமானால் சரி, வெளி; 13:8, அதை நான் உங்களுக்குப் படிக்கப் போகிறேன். உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய, ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். 63நமது பெயர்கள் ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் எப்பொழுது எழுதப்பட்டன? உலகத்தோற்றத்துக்கு முன்பு ஆட்டுக் குட்டியானவார் அடிக்கப்பட்ட போது. தேவன் ஏல், ஏலா, ஏலோகிம், தனிமையில் வாழ்பவராக இருந்த போது. அது பெரிய வைரம் போன்றது. அவர் வேறு எதுவாகவும் அப்பொழுது இல்லை. அந்த வைரத்துக்குள் ''இரட்சகர் என்னும் அவருடைய தன்மை அடங்கியிருந்தது.'' அவ்வாறே, ''சுகமளிப்பவர் என்னும் அவருடைய தன்மையும் அடங்கியிருந்தது. ஆனால், இரட்சிப்பதற்கோ, சுகமளிப்பதற்கோ, அப்பொழுது எதுவுமில்லை அவர் இரட்சகராயிருப்பார் என்றும், அவர் மாமிசத்தில் வெளிப்பட்டு நம்மிடையே வாசம் பண்ணுவார் என்றும், அவர் தழும்புகளால் நாம் குணமாவோம் என்றும், அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னமே அறிந்திருந்தார். எனவே, உலகத்தோற்றத்துக்கு முன்பே அவர் ஆட்டுக்குட்டியானவரை அவருடைய புத்தகத்தின் மேல் கொன்று உலகத் தோற்றதுக்கு முன்பே உங்கள் பெயர்களை அந்த புத்தகத்தில் எழுதி வைத்துவிட்டார். 64இதை கூர்ந்து கவனியுங்கள், தெரிந்து கொள்ளப்படுதல் (Election) முன்னறிதலை (fore knowledge) பின் நோக்குகிறது. முன் குறித்தல் (Predestination) நாம் சேரப்போகும் இடத்தை எதிர் நோக்கியிருக்கிறது. இதை மறந்து போக வேண்டாம் தெரிந்து கொள்ளப்படுதல் முன்னறிதலை பின் நோக்குகிறது. நான் ஒரு முள்ளாக இருந்தேன், நான் இவ்வுலகில் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுபவனாய் இவ்வுலகில் வந்து பாவிகளின் மத்தியில் பிறந்தேன். என் தந்தை தாய், குடும்பத்தினர் அனைவருமே பாவிகள். நான் ஒரு முள்ளாக இருந்தேன். ஆனால், திடீரென்று கோதுமை மணியாகிவிடுகிறேன். இது எப்படி நேர்ந்தது? அது தான் தெரிந்து கொள்ளப்படுதல் என்பது உலகத்தோற்றத்துக்கு முன்பே, இந்த முள் கோதுமை மணியாக வேண்டுமென்று தேவன் நிர்ணயம் செய்தார், ''நான் ஒரு கோதுமைமணி என்று இப்பொழுது அறிவேன். ஏனெனில், நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். நான் எப்படி அதை அறிவேன்? பின் நோக்கிப் பார்த்து அவர் அநேக காலங்களுக்கு முன்பே என்னை முன்குறித்து விட்டார் என்று அறிந்து கொள்வதன் மூலமாக அவருடைய முன்னறிவின் மூலம் நான் அவரை நேசிப்பேன் என்று அவர் அறிந்திருந்தார். எனவே, அவர் நமது பாவங்களை நிவர்த்தி செய்து, அவர் மூலமாய் நான் முள்ளிலிருந்து கோதுமை மணியாக மாற வேண்டுமென்று நிர்ணயித்தார். இப்பொழுது நான் எங்குள்ளேன்?'' நான் இரட்சிக்கப்பட்டு, தேவனுடைய கிருபையினால் நடந்து கொண்டிருக்கிறேன். முன் குறித்தல் எதை எதிர் நோக்குகிறது? நாம் சேர வேண்டிய இடத்தை அவர் என்னை எங்கு கொண்டு செல்வார் என்றும் நான் எங்குபோய்க் கொண்டிருக்கிறேன் என்றும். அது உன்னைப் பற்றிக் கொண்டது. அவ்வளவு தான். 65நாம் இன்னும் சற்று தொடர்ந்து படிக்கலாம். இன்னும் சிறிது நேரத்தில் நாம் கூட்டத்தை முடிக்க வேண்டும். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு. உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். எபே;1:4-6. அவர் என்ன செய்தார்? அவர் தமது முன்னறிவின்படி நம்மை முன்பே கண்டு அவர் இரட்சகர் என்பதை அறிந்து அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். அப்பொழுது, தேவ தூதர்கள் கூட கிடையாது. ஏலா, ஏலோகிம் தேவன் மாத்திரமே. ஆனால், அவருக்குள் இரட்சகர் என்னும் தன்மை குடி கொண்டிருந்தது. எதுவுமே இழக்கப்படாமல் அவர் எதை இரட்சிக்க முடியும்? அவருக்குள் குடிகொண்டிருந்த அவருடைய மகத்தான தன்மை பிற்காலத்தில் வெளிப்பட்டு, அவர் இரட்சிக்க முடியும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே, தமது முன்னறிவின் மூலம் அவர் வருங்காலத்தை பார்த்து அதை ஏற்றுக்கொள்ள கூடிய ஒவ்வொருவரையும் அவர் கண்டார். அவர்களை இரட்சிக்க வேண்டுமானால் அதற்கான ஒரே வழி நானே மாமிசத்தில் வெளிப்பட்டு, மனிதனின் பாவத்தை என் மேல் சுமந்து, அவனுக்காக மரித்து, ஆராதிப்பதற்குரியவராதலே'' என்று அவர் எண்ணினார். ஏனெனில் அவர் தேவன், ஆராதிப்பதற்குரியவர். 66அவர் மனித ரூபத்தில் இரங்கி வந்து மனிதனின் பாவங்களை தம்மேல் சுமந்தார். அப்படி அவர் செய்ததினால் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறவர்களை அவரால் இரட்சிக்க முடியும். நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? முடிவற்ற தேவன், எல்லாவற்றையும் அறிந்தவர். தமது முன்னறிவின் மூலம் ஆட்டுக்குட்டியானவரைக் கொன்று உங்கள் பெயர்களை ஆட்டுகுட்டியின் ஜீவபுஸ்தகத்தில் எழுதி வைத்துவிட்டார். பிசாசின் வஞ்சகத்தையும், அவன் என்ன செய்வான் என்பதையும் அவர் அப்பொழுதே அறிந்திருந்தார். எனவே, அவர் உங்கள் பெயர்களை அதில் எழுதி வைத்துவிட்டார். அந்திகிறிஸ்து என்பவன் மிகவும் பக்தியுள்ளவனாகவும், நல்லவனாகவும், புத்திகூர்மையுள்ளவனாகவும் இருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பான் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படுவதென்பது கூடாத காரியம். ஏனெனில், அவர்களுடைய பெயர்கள் உலகத்தோற்றத்துக்கு முன்பே தீர்மானம் செய்யப்பட்டுவிட்டது. தெரிந்து கொள்ளுதலின்படி அவர் உங்களை முன்குறித்தார். முன்குறித்தலின்படி அவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை அறிந்திருக்கின்றனர். 67அதை யார் சந்தேகிக்க முடியும்? அப்படி தான் பவுல் கூறுகின்றான். பவுல் எழுதின வேதவாக்கியம் அப்படி கூறுகின்றது. அப்படிதான் அவன் சபைக்கு உரைக்கிறான். உலகத்தோற்றத்துக்கு முன்பே சபை அதன்ஸ்தானத்தில் பொருத்தப்பட்டுவிட்டது. தேவன் பிரசவ வேதனை கொண்டு, உங்களை பிரசவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை முன்னறிந்தவராய், உங்களை உங்களுடைய ஸ்தானத்தில் அவருடைய சரீரத்தில் பொருத்தி. உங்களை குடும்பத் தலைவியாகவும் (housewife), விவசாயியாகவும், போதகராகவும், தீர்க்கதரிசியாகவும், இதுவாகவும், அதுவாகவும் வைத்தார் உங்களை உங்கள் ஸ்தானத்தில் அவர் பொருத்தினார் நாம் பரிசுத்தமாக்கப்படுதலின் (Sanctification) மூலம் வெள்ளைப்பூண்டு தேசமாகிய எகிப்தை விட்டு வெளி வந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படும் போது... பரிசுத்த ஆவி தான் தேவன் நமக்கு வாக்களித்துள்ள தேசம். ''நீங்கள் மீட்கப்படும் நாளுகொன்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' என்று எபே;4:30 உரைக்கிறது. தேவன் சபையை மாத்திரம் முன்குறித்து விட்டு, ''கோடிக்கணக்கானவர்கள் பக்தியுள்ளவர்களாய் நடப்பார்கள். ஆனால், அவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்'' என்கிறார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தவர்கள் மாத்திரமே வஞ்சிக்கப்படுவதில்லை. உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர்களுடைய பெயர்கள் ஆட்டு குட்டியின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டு, அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்து, அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். 68பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதனால் தாங்கள் விசித்திரமாக நடக்க நேரிடுமோ என்று அநேகர் பயப்படுகின்றனர். பரிசுத்த ஆவி உங்களை சில செயல்களை செய்யத் தூண்டி, அதன் விளைவாக ஜனங்களுக்கு முன்பாக வெட்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்று அநேகர் பயப்படுகின்றனர் பரிசுத்த ஆவியைப் பெறுவதனால் சிலர் அழ நேரிடும் என்றும், அவர்கள் கணவரோ, மனைவியோ, தாயாரோ, அடுத்த வீட்டுக்காரரோ, அல்லது எஜமானனோ அதை காண நேரிடுமென்றும் அநேகர் பயப்படுகின்றனர். முடிப்பதற்கு முன்பு, ஒரு காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனைக் குறித்து உங்களிடம் கூற விரும்புகிறேன். தாவீது என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். தேவனுடைய உடன்படிக்கை பெட்டிபெலிஸ்தியர் நாட்டில் சிக்கிக் கொண்டது. அது காளை வண்டியில் அங்கிருந்து கொண்டுவரப்பட்டது. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி வருவதை தாவீது கண்டபோது, அவன் ஒரு சிறு அங்கி (gown) மாத்திரம், அப்பொழுது அணிந்திருந்தான். அவன் ஓடிச் சென்று கால்களை மேலே தூக்கி உதைத்து, குதித்து, கூச்சலிட்டு, நடனமாடினான். அவன் யார் தெரியுமா? இஸ்ரவேலின் ராஜா. அவன் விசித்திரமாய் நடந்து கொள்வதை அவனுடைய மனைவி ஜன்னல் வழியாகக் கண்டு அவனை நிந்தித்தாள்.'' அந்த முட்டாளைப் பாருங்கள். கால்களை உதைத்து நடந்து கொள்ளும் விதத்தைப் பாருங்கள். அவருக்குப் பைத்தியம் தான் பிடித்துவிட்டது என்று சொல்லியிருப்பாள். அன்றிரவு அவன் வீடு திரும்பின போது அவள், ''நீர் என்னை வெட்கமடையச் செய்துவிட்டீர். இராஜாவாகிய நீர், என் கணவர், இப்படியா நடந்துகொள்வது?'' என்று கேட்டிருப்பாள். ''தாவீது, நாளைக்கு இதைக்காட்டிலும் சிறப்பாக நடனமாடப் போகிறேன், நான் கர்த்தருக்காக நடனமாடினேன் என்று உனக்குத் தெரியவில்லையா?'' என்றான். அவன் கடந்து சென்று, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தையடைந்தான். அவன் உலகப்பிரகாரமான நாகரீகம் அனைத்தும் களைந்து போட்டான். உடன்படிக்கைப் பெட்டி தன் சொந்த பட்டினத்துக்கு வருகிறதென்று அறிந்து அவன் மிக்க மகிழ்ச்சி கொண்டான். 69ஓ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். சிலர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவே அஞ்சுகின்றனர். அவர்கள் அந்நியபாஷை எங்கு பேசிவிடப் போகிறார்களோ என்று பயம். ஏனெனில், யாராகிலும் அவர்களைப் பார்த்து, ''இவனும் அந்நியபாஷை பேசும் கூட்டத்தைச் சேர்ந்தவன'' என்று சொல்லி விடுவார்களே. அவர்கள் சபைக்குள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள பயப்படுகின்றனர். அவர்கள் அதைக் குறித்து வெட்கப்படுகின்றனர். ஊ!ஓ! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குறித்து நான் பிரசங்கம் செய்திருப்பதனால், என் பிரசங்க ஒலிநாடாக்கள் அனைத்தையும் நான் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஒருவர் கூறினார். நான் அவைகளை திரும்ப பெற்றுக்கொள்ளப் போவதில்லை. அதற்கு பதிலாக நான் அதிகமான ஒலிநாடாக்களை பதிவு செய்கிறேன். அது உண்மை. அதிகமான ஒலிநாடாக்களை அந்த ஞானஸ்நானம் வேதப்பூர்வமானது. நேற்று நாம் செய்தது. அவர்களுக்கு விருப்பமாயிராவிட்டால், நாளைக்கு நாம் என்ன செய்கிறோமென்று கவனியுங்கள். அதை தான் நாம் செய்ய வேண்டும். நாம் செய்து கொண்டே போக வேண்டும். அதற்கு முடிவேயிராது. ஏனெனில், அது தேவனால் உண்டானது. அது தேவன். 70தேவன் தாவீதின் விஷயத்தில் என்ன செய்தார் தெரியுமா? அவர் பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, “தாவீதே, நீ என் இருதயத்திற்கு ஏற்றவன்” என்றார். தாவீது வெட்கப்படவேயில்லை. அவன் கர்த்தரின் ஊழியக்காரன். அவன் கர்த்தரை நேசித்தான். அவன் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்தான். எனவே, அவன் மனிதப் பிரகாரமாக தன் கெளரவத்தைக் குறித்து கவலை கொள்ளவில்லை. பாருங்கள், இன்று காலை என் பிரசங்கத்தில் நான் கூறினது போன்று, நாம் மிகவும் பயந்து போய். வேத பள்ளியில் படித்து வெளி வந்து ஒரு சவுல், நமது மார்க்கத்தை நாம் எப்படி கடைபிடிக்க வேண்டுமென்று நமக்கு கற்பிக்க விரும்புகிறோம். அது, யோர்தானின் இந்த பக்கத்தில். ஆனால் அதன் மறுபுறத்தில், பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகின்றார். அந்த உளையான சேற்றிலிருந்து நீங்கள் வெளி வந்தவர்கள். அவர்கள் உங்களைக் குறித்து என்ன நினைத்தாலும், நீங்கள் கவலைப்படுவதில்லை. அங்கு நீங்கள் மரித்திருக்கிறீர்கள். உங்கள் ஜீவன் கிறிஸ்துவுக்குள் மறைந்து, பரிசுத்த ஆவியினால் நீங்கள் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் எதற்கும் கவலைப்படுவதில்லை. நீங்கள் கானானில் வசிக்கிறீர்கள். முதிர்ந்த தானியத்தை ஜீரணிக்க உங்களால் முடியும். நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். 71சில வருடங்களுக்கு முன்பு, சபையானது இன்னும் கட்டப்படாதிருக்கையில், இங்கே இந்த மூலையில் என்னுடைய முதல் கூட்டமானது கூடாரத்தில் நடைபெற்றது என்பதை, சகோ. காலின்ஸ், நான் அங்கே நின்று நினைவு கூர்ந்தேன். நான் இன்று பிரசங்கிப்பது போலவே, அன்றும் நான் இதே சுவிசேஷத்தை, இதே காரியத்தை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தண்ணீர் ஞானஸ்நானம், ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை இவைகளினின்று நான் ஒரு அங்குலமும் ஒருபோதும் விலகினதேயில்லை. தேவன் அதைக் குறித்து இன்னும் அதிகமாய் எனக்கு வெளிப்படுத்தினார். அவர் எனக்கு வெளிப்படுத்தியது போலவே, அதை நான் கொடுத்துக் கொண்டேயிருந்தேன். அவர் அவற்றினின்று ஒன்றையும் எடுத்துப் போடாமல், அவர் அதை இன்னும் கூட்டிக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். 72நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது, 500 பேர் கரையில் நின்று கொண்டு, ''புயலடிக்கும் யோர்தானின் கரையில் நான் நின்று கொண்டு, எனக்கு சுதந்தரமான அந்த அருமையான, மகிழ்ச்சியான கானான் தேசத்தை, என் ஆசை ததும்பும் கண்களால் கண்டேன். அந்த ஆரோக்கியமான கரையை நான் என்று அடைந்து, நான் எக்காலத்தும் ஆசிர்வதிக்கப்படுவேன்? நான் என்று என் பிதாவின் சமுகத்தை அடைந்து எக்காலத்தும் இளைப்பாறிக் கொண்டிருப்பேன்?'' என்னும் பாடலைப்பாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் பாடிக்கொண்டிருந்த போது, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க ஒரு பையனை ஆற்றினுள் கொண்டு சென்றேன். நான், ''பரலோகப் பிதாவே, இந்த பையனை அவனுடைய அறிக்கையின் பேரில் உம்மிடம் கொண்டு வருகிறேன்...'' என்று ஜெபித்த போது. அந்த பையனும், நானும் மாத்திரம், அந்த புகைப்படம் என் வீட்டில் உள்ளது. நான், ''ஆண்டவரே, இந்த பையனின் அறிக்கையின் பேரில், இவனுக்கு தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கும் போது இவனை பரிசுத்த ஆவியினால் நிறைப்புவீராக'' என்று ஜெபித்த போது, ஏதோ ஒன்று சுழன்று கொண்டே இறங்கி வந்தது: பிரகாசமான அந்த விடிவெள்ளி நட்சத்திரம் இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்தது. 73இந்த செய்தி உலகம் பூராவும் சென்று, கனடாவையும் சுற்று பாகங்களையும் அடைந்தது. அவர்கள், உள்ளூர் பாப்டிஸ்டு போதகர் ஒருவர் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு புதிரான ஒளி தோன்றினது'' என்று பிரசுரித்தனர். சில நாட்களுக்கு முன்பு, டாக்டர் லாம்சா என்னிடம் வந்திருந்தார். அவருக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. அவர் ஒரு படத்தைக் கொண்டு வந்திருந்தார். அதை சகோதரன் இப்பொழுது அவரிடம் வைத்துள்ளார். அந்த படம் உங்களிடம் உள்ளதா? அந்த வேதாகமம் உங்களிடம் உள்ளதா? அது, அதனுள்தான் இருந்தது. சரி, அது தேவனுடைய பழைய எபிரெய அடையாளம். வேதாகமம் எழுதப்படுவதற்கு முன்னமே, அது யோபின் காலத்தில் இருந்த அடையாளமாகும். அது தேவனுடைய மூன்று தன்மைகளைக் குறிக்கிறது. மூன்று தெய்வங்கள் அல்ல. ஒரே தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று தன்மைகளில் (attributes) இருக்கிறார். அவர் கிரியை செய்யும் மூன்று உத்தியோகங்கள். மூன்று தெய்வங்களல்ல, மூன்று தன்மைகள்! 74அந்த புகழ்பெற்ற மனிதர், டாக்டர். லாம்சா, லாம்சா வேதாகமத்தின் மொழிப்பெயர்ப்பாளர் அன்று காலை என்னிடம் வந்திருந்த போது, நான் அவரிடம், ''அது என்ன அடையாளம்?'' என்று கேட்டேன். ''அது எபிரெய மொழியில் தேவனுடைய பழமையான அடையாளம். அது, தேவன் மூன்று தன்மைகளில் இருப்பதைக் குறிக்கிறது'' என்றார். நான் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதைப் போலவா?'' என்றேன். அவர் நிறுத்திவிட்டு, காப்பி கோப்பையை கீழே வைத்துவிட்டு என்னை உற்றுப் பார்த்தார். ஜீன், லியோ, நீங்கள் அப்பொழுது அங்கிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். அவர், ''அதை நீ விசுவாசிக்கிறாயா?'' என்று கேட்டார். ''என் இருதயப்பூர்வமாக'' என்று பதிலளித்தேன். அவர், ''சகோ. பிரன்ஹாமே, சென்ற இரவு 2ம் கூட்டத்தில் பகுத்தறிதலின் வரம் கிரியை செய்வதைக் கண்டேன். அப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை அமெரிக்காவிலும் என் நாட்டிலும் கண்டதில்லை“ என்று கூறிவிட்டு, ''இந்த அமெரிக்க ஜனங்களுக்கு வேதாகமம் சரியாகத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று அவர்களுடைய ஸ்தாபனமே. அவர்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்று கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், சென்ற இரவு உங்கள் கூட்டத்திற்கு நான் வந்திருந்த போது... '' சகோ. ஜீன், இதை நான் பயபக்தியோடும், அன்போடும் கூறுகிறேன்... ''நீங்கள் தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். இப்பொழுது நிங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவை மூன்று தெய்வங்களல்ல, அவை தன்மைகள் என்று கூறும்போது நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசியென்பது ஊர்ஜிதமாகிவிட்டது. இல்லையேல் அது அவ்விதம் உங்களுக்கு வெளிப்பட்டிருக்க முடியாது'' என்றார். அவர், ''இது ஓர் பரிபூரண அடையாளம் என்று கூறிவிட்டு. '' நீர் ஒருத்துவக்காரர் அல்லவே'' என்று என்னைக் கேட்டார். 75நான், ''இல்லை, ஐயா. நான் ஒருத்துவக்காரன் அல்ல. தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன் என்றும், அந்த மூன்று தன்மைகளும், அந்த ஒரே தேவன் வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று, உத்தியோகங்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்றேன். அவர், ''தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக'' என்று கூறிவிட்டு, என்றாவது ஒரு நாளில் அதற்காக உங்கள் இரத்தத்தை பூமியில் சிந்த நேரிடலாம். ''தீர்க்கதரிசிகள் எப்பொழுதும் தங்கள் நோக்கத்திற்காகவே மரிப்பது வழக்கம்'' என்றார். ''அதுவே தேவனுக்குப் பிரீதியாயிருக்குமானால், அப்படியே ஆகக்கடவது'' என்றேன். லாம்சா வேதாகமத்தை எழுதியவர். 76ஓ, அது மிகவும் உண்மை. எத்தனை முறை நான் இந்த சபையிடம், சவுலைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, இஸ்ரவேலரிடம் சாமுவேல் கூறினவிதமாக, ''நீங்கள் ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டு, ஒருவிதமான மார்க்கத்துக்கு கட்டுப்படுவதற்கு முன்பாக, பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்த நீங்கள் ஏன் விட்டு கொடுக்கக்கூடாது?'' என்று கூறினதுண்டு? நீங்கள் ஏன் தேவனை உங்கள் தலைவராகக் கொண்டு, அவர் உங்களை ஆசிர்வதிக்கும்படி விட்டுக் கொடுத்து, உங்கள் ஸ்தாபனத்தை நீங்கள் ஏன் மறந்துவிடக்கூடாது? நீங்கள் எந்த ஸ்தாபனத்தையும் சேரவேண்டாமென்று நான் கூறவில்லை. உங்கள் விருப்பப்படி, நீங்கள் எதை வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள். அது உங்களைப் பொறுத்தது. தனிப்பட்டவர் என்ற முறையில், பரிசுத்த ஆவியானவர் உங்களை வழி நடத்தும்படி விட்டுக் கொடுங்கள் என்று தான் கூறுகிறேன். நீங்கள் வேதாகமத்தைப் படியுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று வேதம் கூறுகிறதோ, அதை செய்யுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! 77நான் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டேன். யாராகிலும் ஜெப வரிசையின் வழியாக வந்து ஜெபித்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்று தெரியவில்லை. அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஒன்று, இரண்டு, மூன்று. சரி, நீங்கள் விரும்பினால் இங்கு வந்து நில்லுங்கள் நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போம். நான் உங்களை இப்பொழுது விட்டுப்போக விரும்பவில்லை. முடிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வமாக சிலவற்றை செய்ய விரும்புகிறேன். 78எத்தனை பேர் எபேசியர் புத்தகத்தின் போதனையை விரும்பினீர்கள்? புதன் இரவன்று, நாம் முத்திரையைக் குறித்து பேசலாம். அடுத்த ஞாயிறு காலை, சபை ஸ்தானத்தில் பொருத்தப்படுவதைக் குறித்து சிந்திப்போம். ஜெபர்ஸன்வில் ஜனங்களே, கூடுமானால் புதன் இரவன்றே அதை பார்க்கலாம்; சபை எந்த ஸ்தானத்தில் இருக்க வேண்டுமோ, அந்த ஸ்தானத்தில் அதை பொருத்துவது. நாம் ஒவ்வொருவரும் நாம் எப்படி சுவிகாரப் புத்திரராகும்படி அழைக்கப்பட்டோம், என்று தேவன் நம்மை சுவிகாரப் புத்திரராக ஏற்றுக் கொண்டு பரிசுத்த ஆவியின் மூலமாக நம்முடைய ஸ்தானத்தில் இருக்க வேண்டுமோ, அந்த ஸ்தானத்தில் நம்மை பொருத்தியிருக்கிறார். பாருங்கள்? அவர்கள் யோர்தானைக் கடந்த போது, அவர்கள் எல்லோரும் எபிரெயர்களாயிருந்தனர். ஆனால், அதன் பிறகு யோசுவா தேசத்தைப் பங்கிட்டு அவர்களுடைய தாய்மார்கள் பிரசவத்தின் போது, பரிசுத்த ஆவியானவர் உரைக்கச் சொன்ன வார்த்தைகளை அவர்கள் உரைத்தபடியே அவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த தேசத்தைப் பங்கிட்டு கொடுத்தான். 79கவனியுங்கள், யாக்கோபு மரணத்தருவாயிலிருந்த போது, அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் பார்வை மங்கிப் போனவனாய், கால்களை மடக்கிப் படுத்துக் கொண்டு, “யாக்கோபின் குமாரரே. நீங்கள் கூடி வாருங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்” என்றான். ஓ, நான் விசித்திரமாகத் தென்படலாம் ஜனங்கள் விசித்திரமாகத் தென்படலாம். நீங்கள் மாத்திரம் அந்த உறுதியை (assurance), இருதயத்திலுள்ள அந்த வாஞ்சையை அறிவீர்களானால்! கூடி வாருங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன், ''நான் வேத வாக்கியங்களை எடுத்துக் கொண்டு இன்று யூதர்கள் எங்கு தங்கியுள்ளனரோ, அதன் வரைபடத்தையும் எடுத்துக் கொண்டு, அவர்கள் கடைசி நாட்களில் எங்கிருப்பார்கள் என்று யாக்கோபு அறிவித்த அதே இடத்தில் அவர்கள் அந்த இடத்தில் இருக்கவில்லை. அதே நாள் இரவில் தான், கர்த்தருடைய தூதன் எனக்கு பிரத்தியட்சமாகி, இவ்வூழியத்தைக் குறித்து எனக்கு அறிவித்தார் அவர்கள் எங்கிருப்பார்கள் என்று யாக்கோபு கூறினானோ, அதே இடத்தை அவர்கள் அடைந்து, இன்றைக்கும் அதே இடத்தில் அவர்கள் உள்ளனர் என்று என்னால் காண்பிக்க முடியும். ஓ, ஓ, என்னே! ஓ, என்னே நாம் வீடு செல்வதற்கு ஒரு நாள் அருகாமையில் உள்ளோம். 80அருமையானவர்களே, நீங்கள் வியாதிப்பட்டிருக்கிறீர்கள். இல்லையேல், நீங்கள் இங்கு காரணமின்றி நின்று கொண்டிருக்க மாட்டீர்கள். நான் உங்கள் சகோதரன். வியாதியஸ்தருக்கு ஜெபிக்க நான் தேவனிடமிருந்து கட்டளை பெற்றுள்ளேன். சுகமளிக்க எனக்கு வல்லமை கிடையாது. ஆனால், ஜெபத்தின் வல்லமை என்னிடமுண்டு இன்று காலை நான் கூறியது போன்று, தாவீதினிடம் ஒரு கவணைத் தவிர வேறொன்றுமில்லை. அவன், ''தேவனுடைய வல்லமை அதன் மேல் வரும் போது அது என்ன செய்யுமென்று எனக்குத் தெரியும்'' என்றான். பாருங்கள்? உங்களுக்காக ஒரு சிறு ஜெபத்தை மாத்திரமே நான் ஏறெடுக்க முடியும். என் கைகளை உங்கள் மேல் வைக்க முடியும். தேவன் பேரிலுள்ள விசுவாசம் என்ன செய்யுமென்று எனக்குத் தெரியும். அது மற்றவர்களுக்கு செய்துள்ளதை உங்களுக்கும் செய்யும். நீங்கள் சற்று அருகாமையில் வரும்போது அதை விசுவாசிக்கிறீர்களா? 81இதை சற்று பயனுள்ளதாக்க. என் சகோதரனை இங்கு வரும்படி அழைத்து, இவர்களை எண்ணெயால் அபிஷேகம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப் போகிறேன். அப்படி செய்வீர்களா, சகோ. நெவில்? ஜெபத்திற்காக தலை வணங்கும்படி சபையைக் கேட்டுக்கொள்ளப் போகிறேன். கடந்த வாரம் அந்த ஆமணக்கெண்ணை காரணமாக நான் அதிக வியாதியுற்றிருந்த போது, யாராகிலும் வந்து கைகளை வைத்து ஜெபிக்கமாட்டார்களா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன். தேவன் ஆசீர்வதித்து உதவிசெய்துள்ள யாராகிலும் வந்து கைகளை வைத்து ஜெபம் செய்திருந்தால், அதை பாராட்டியிருப்பேன். அப்பொழுது, எனக்கிருந்த உணர்ச்சி தான் இப்பொழுது உங்களுக்கு இருக்கும். யாராகிலும் எனக்கு என்ன செய்ய வேண்டுமென்று அப்பொழுது நான் விரும்பினேனோ, அதையே நான் உங்களுக்கு இப்பொழுது செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். அந்த வேலையை நான் அசட்டை செய்யாதபடிக்கு தேவன் காப்பாராக. நான் களைப்புற்றிருந்த போதிலும்; ஒரு அடி என்னால் எடுத்து வைக்க முடியாத அளவுக்கு நான் களைப்புற்றிருக்க நேரிட்டாலும், நான் தொடர்ந்து என் பணியை செய்வேனாக. ஏனெனில், அந்த தேசத்தில் உங்கள் ஒவ்வொருவரையும் நான் மறுபடியும் சந்திக்க வேண்டும். 82வயோதிப ஆண்களும், பெண்களும் ஒடிந்து போய், நாடி தளர்ந்து. தலைமயிர் நரைத்து விழுந்து, ரோஜாப்பூ மொட்டு விரிந்து அதன் இதழ்கள் உதிர்வது போல், நீங்களும் உதிர்ந்து போயிருக்கிறீர்கள் அல்லவா? அது உண்மை... தேவனுடைய மகிமைக்காக பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக, நீங்கள் உதிராமல் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றீர்கள். எதிராளி உங்களைப் பிடித்துக் கொண்டு ஓடிப் போகும் போது. தேவனுடைய கவணைக் கொண்டவனாய், விசுவாசத்துடன் தேவன் எனக்கு அளித்துள்ள வரத்துடன் வருகிறேன் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறேன். பேதுரு இங்கிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் என்ன செய்திருப்பான்? நாம் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. இப்படி கூறினால் போதும், ''நீங்கள் இன்னாரா? உங்கள் பெயர் என்ன?'' ''சகோதரி. ஹாவர்ட்.'' ''சகோதரி, நீங்கள் விசுவாசியா? அப்படியானால், மீட்பின் சகல ஆசிர்வாதங்களுக்கும் உங்களுக்கு உரிமையுண்டு, சகோதரி. ஹாவர்ட், எல்லாம் சரியாகிவிடும்'' என்று கூறிவிட்டு நடந்துவிடுவேன். ''ஆண்டவரே, அது நிறைவேற வேண்டும். அது நிறைவேற வேண்டும்'' என்பேன். ''இன்று நான் ஜனங்களுக்காக ஜெபிக்கவரும் போது, அப்படி செய்ய வேண்டுமென்று தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்'' என்று எண்ணினேன். அதுதான். நான் கூறுவது புரிகின்றதா? 83நான் அநேக முறை ஜனங்களிடம், ''ஓ, அருமை சகோதரியே, நீ விசுவாசிப்பாயா? நீ விசுவாசிப்பாயா? ஆண்டவரே, ஓ, தேவனே, அவர்கள் விசுவாசிக்கும்படி செய்யும்'' என்று ஜெபித்ததுண்டு. ஓ, தயவு கூர்ந்து அதை ஏற்றுக் கொள்வீர்களா?'' என்று அவர்களிடம் நான் கெஞ்சினதுண்டு. அதுவல்ல. அந்த கட்டத்தை நான் கடந்துவிட்டேன். இப்பொழுது, ''சகோதரி. ஹாவர்ட், நீங்கள் விசுவாசியா?'' ''ஆம்'' 'சரி, சகோதரி ஹாவர்ட். நீ விசுவாசியானால், தேவனிடமுள்ள எல்லாவற்றிற்கும், நீ சுதந்தரவாளியாகி விடுகிறாய் என்று கூறிவிட்டு, அவள் கையை பிடிப்பேன். பாருங்கள், அதை நான் விசுவாசிக்கிறேன். என் கைகளை சகோதரி ஹாவாட்டின் மேல் வைப்பதன் மூலம் நான் அவருடன் தொடர்பு கொண்டுவிடுகிறேன். இயேசு, அவர்களுக்காக ஜெபியுங்கள்'' என்று கூறவில்லை. உங்கள் கைகளை அவர்கள் மேல் வையுங்கள்'' என்று தான் கூறினார். அவ்வளவு தான். அப்பொழுது அவள் சுகமடைகிறாள். ''எல்லாம் சரியாகிவிடும், சகோதரி. ஹாவர்ட். சுகமடைந்து வீடு செல். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக.'' 84''சகோதரி ஹாம்ப்டன், நீ விசுவாசிதானே. அப்படியானால், தேவனிடமுள்ள எல்லாவற்றிற்கும் நீ சுதந்தரவாளியாகிவிடுகிறாய். தேவன் உன்னோடு இருப்பாராக. ஆமென். சுகமடைந்து வீடு செல். இயேசுகிறிஸ்து உன்னை சுகமாக்கிவிட்டார். ஆமென். நீங்கள் சகோதரி. ஸ்லா? சகோதரன். ஜாக்... அன்றொரு நாள் நாங்கள் மருத்துவமனையில் ஜெபம் செய்த பெண் நீங்கள் தான் அல்லவா. அப்படியானால் சகோதரி. ஸ்லா, நீங்கள் ஒரு விசுவாசியும் நாம் கொண்டிருக்கிற எல்லாவற்றிற்கும் சுதந்தரிக்கப் போகும் ஒருவராய் நீங்கள் இருக்கிறீர்கள். சகோதரி. ஸ்லா, நீங்கள் எதைக் கேட்டீர்களோ அதைப் பெற்றுக் கொண்டு நலமாக இருப்பீர்களாக. தேவன் அதை உங்களுக்கு அருளுவார். சகோதரன். ஜீன், தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கின்றீர்களா? சரியாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்ற காரியத்தை தேவன் உங்களுக்கு அருளுவாராக, ஜீன். நான் உங்களை அறிவேன். அது சரி. சகோதரியே, நீங்கள் சுவிசேஷம் சொல்பவர். உங்களை எனக்குத் தெரியும். இங்கே இருப்பது உங்கள் கணவர். அன்றொரு நாள் நான் தொலைபேசியில் ஜெபித்தது இவருக்காகத் தான். அதை நான் எப்பொழுதும் நினைவில் கொண்டிருக்கிறேன். டுல்சாவில் நடந்த கூட்டத்திற்கு இவரால் செல்ல முடியவில்லை. கூட்டத்திற்கு வந்தார், கர்த்தர் இவரை சுகப்படுத்தி அந்த கூட்டத்திற்கு இவரை அனுப்பி வைத்தார். சகோதரியே, நீங்கள் வேறொருவருக்காக இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள், என்ன அருமையான ஒரு கிறிஸ்தவ செயல். பாருங்கள், அவரும் நமக்கு பதிலாக நம் எல்லோருக்காகவும் அவர் நின்றார். நீங்கள் ஒரு விசுவாசி. ஆகவே, தேவன் வாக்களித்துள்ள எல்லா காரியத்திற்கும் உங்களுக்கு உரிமையுண்டு. நான் அவருடைய ஊழியக்காரன். ஆகவே, நீங்கள் கேட்டது எதுவோ அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு நான் தருகிறேன். 85வாரும், சகோதரன். பில். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களுக்கு அபிரிமிதமாக அருமையானவராக இருக்கிறார். நீங்கள் ஒரு விசுவாசி; நீர் ஒரு விசுவாசி என்பதை நான் அறிவேன். நீங்கள் ஒரு விசுவாசியாயிருப்பதால் நீங்கள் கேட்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் தேவன் உங்களுக்கு அளிப்பார் என்று நான் நம்புகிறேன். அவருடைய ஊழியக்காரனாக, உங்களுக்கு, என் சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் இருதயத்தின் வாஞ்சையை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இப்பொழுது, சென்று அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரி. புரூஸ், உங்களை நான் அறிவேன். உங்களுக்கும் எனக்கும் பின்பாக அந்த சிறிய நர்ஸ் இருந்தார்கள். அவள் அங்கே அந்த ஜே, ஜே, டுவின் ஜே உணவகம் அல்லது அதைப் போன்ற ஒன்றிற்கு வருவது வழக்கம். நீங்கள் மற்றவர்களுக்காக ஜெப வரிசையில் நிற்பது வழக்கம். பிதாவை நோக்கி நீங்கள் கேட்கும் உங்கள் வாஞ்சை என்ன? இன்றிரவு உங்களுக்காக... உங்களை மருத்துவரின் செயல்வரம் பிற்கப்பால் சத்துரு கொண்டு சென்றுவிட்டான்; ஆனால், நான் ஒரு கவண் கல்லோடு உங்கள் பின்னால் வருகின்றேன். ஆகவே, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த கவண் கல்லை சிறு நீரகங்களுக்குள் இருக்கும் அந்த கல் - அம்புகள் மற்றும் சிறுநீரகம் அடைபட்டிருக்குள் நிலையை நோக்கி எறிகின்றேன், அது உங்களை...?... (பாருங்கள்?) இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினூடாக நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக. ஆமென். 86...?... தந்தையின் பெயர், ஐயா. நீங்கள் ஒரு விசுவாசியா? அது உங்கள் கீழ், இடது பக்கமாக உங்களுக்கு தொந்தரவு அளிக்கிறது... தேவன் உங்களுக்கு அதை அளிப்பாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ஐயா? இது அவருடைய ஊழியக்காரனாகும். கர்த்தாவே, இந்தக் கரமானது ஒருக்கால், அநேக நாள் கடுமையாக உழைத்திருக்கும். ஏதோ ஒரு காரியத்திற்காக, நோக்கத்திற்காக இங்கே வந்துள்ளது. இவருடைய இருதயத்தின் வாஞ்சையை அளித்தருளும், பிதாவே, நீர் அளிப்பீரென்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். சந்தேகப்படாதீர்கள்; உங்களைத் தொந்தரவு செய்யும் அந்த வலியானது உங்களை விட்டுச் செல்லும், நீர் சுகமாவீர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே...?... நீங்கள் ஒரு விசுவாசி, அப்படித்தானே? நீங்கள் ஒரு விசுவாசி, ஆகவே நீங்கள் இந்த எல்லா ஆசீர்வாதங்களுக்கும் சுதந்தரவாளியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி. பிதாவே, என் சகோதரியாகிய இவர்களை இந்த வரிசையில்...?... குறியிலக்கின் (target) நடுவில், ஆகவே, நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சத்துருவின் பிடியிலிருந்து இவர்களை திரும்ப உம்மிடம் கொண்டு வருகிறேன். ஆமென். அந்த விதமாகத் தான் இது இருக்கும். உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய விருப்பமில்லை. ஓ ஆண்டவரே, இந்த வாலிபப் பெண் இங்கு நிற்கையில், இள வயதின் மலர்ச்சியிலே தான் இவள் இருக்கின்றாள், ஒரு நுரையீரல் இவளுக்குள்ளிருந்து வெளியே எடுக்கப்பட வேண்டிய நிலை. அப்படியானால் இவள் வாழ் நாள் முழுவதும் கூனிக் குனிந்தே தான் கழிக்க வேண்டும், நான் இவளுக்காக ஜெபிக்கிறேன், ஆண்டவரே, ஜெபத்தின் அக்கினியை நேராக இவளை நோக்கி அந்த நுரையீரலை நோக்கி இலக்குவைக்கிறேன். நான் இந்த ஜெபத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறேன்; இதுதாமே...?... இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்...?... ஆமென். 87நீங்கள் ஒரு கிறிஸ்தவளா? சகோதரி. டர்ட்...?... தலை என்னிடமிருந்து சற்று அகன்றிருக்கிறது. கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த இந்த சிறிய கவணுடன் இவளை உம்மிடம் கொண்டு வருகிறேன். தாவீது அவனுடைய தகப்பனின் ஆட்டு மந்தையை காவல் காக்க ஒரு கவணை நீர் அவனுக்கு அளித்தீர், சத்துருவானவன் ஆட்டின் பின்னால் வந்தாலும் கூட தாவீது அஞ்சவில்லை; அவன் அந்த சிறிய கவண் கல்லை எடுத்து சிங்கங்கள், கரடிகளை விரட்டிச் சென்று ஆட்டைத் திரும்பக் கொண்டு வந்தான். இது விசுவாச ஜெபமாகும். நான் இந்த ஜனங்கள் உண்மையுடன் விசுவாசிக்கும் படிக்கும் நான் செய்வேனானால்... என்று நீர் என்னிடம் கூறியுள்ளீர். இன்றிரவு நான் சகோதரி. டர்ட் அவர்களை திரும்பக் கொண்டு வருகிறேன். சத்துருவின் கைகளிலிருந்து இவர்களை நான் பிடுங்குகிறேன். இவர்கள் உம்முடைய ஆடாயுள்ளார்கள். பிதாவின் மந்தைக்கு இவர்களை நான் திரும்பக் கொண்டு வருகிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். சகோதரி. லோவ், உயர் இரத்த அழுத்தம்... சகோதரி. லோவ், நீங்கள் ஒரு விசுவாசியாக, எல்லா ஆசீர்வாதங்களுக்கும் சுதந்தர வாளியாக உள்ளீர், அப்படித்தானே? அப்படியானால், பிதாவாகிய தேவனே, சகோதரி. லோவ் அவர்களின் உயர் இரத்த அழுத்தங்களுக்காக தேவனுடைய கவணிலிருந்து இந்த ஜெபத்தைஎய்த குறிபார்க்கின்றேன். அடுத்த தடவை மருத்துவர்கள் இரத்த அழுத்த அளவை சோதிக்கும் போது இவர்களைப் பார்த்து சரியான இயல்பான நிலையில் உள்ளது.'' என்று கூறுவார்களாக. எது அவ்வாறு ஆகும் படிக்குச் செய்தது என்பதை இவர்கள் அறிந்து கொள்வார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை இவர்களுக்கு அளிக்கின்றேன். ஆமென். 88ஆம்... இங்கே என் அப்பா இன்றிரவு இருந்து அவருக்காக நான் ஜெபத்தை ஏறெடுக்க எனக்கு விருப்பம் தான். உங்களுக்கும் கூடத்தான். எனக்குப் புரிகின்றது. பரலோகப் பிதாவே, இந்த மகனை வளர்த்த அந்த மனிதன், அந்த மனிதனாலே தான் இவர் இப்பொழுது, இன்றிரவு பூமியில் இருக்கின்றார். ஆகவே, அவருடைய சொந்த மகனாகிய இவர் விரும்புவது, இவருடைய தகப்பன் பாவ உலகத்திலிருந்தும், குடி பழக்கத்திலிருந்தும் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே. ஓ, கர்த்தாவே, இந்த ஜெபத்தை, இந்த கவண் கல்லை என்னால் எறிய முடிகின்ற அளவிற்கு விசுவாசத்தோடும், பலத்தோடும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவ்வாறு செய்திருக்கின்ற அந்த பிசாசை நோக்கி வீசுகிறேன்...?... சரியாக அங்கே... அவர் தாமே மந்தைக்குள்ளாக பத்திரமாக வருவாராக, இயேசுவின் நாமத்தில். ஆமென். ஆமென். உனக்கும் ஒரு வாஞ்சை உண்டா? எல்லா வாக்குத்தத்தங்களும் இருக்கின்ற அந்த தேசத்திற்குள்ளாக நீ வர விரும்புகிறாயா. இப்பொழுது, கர்த்தாவே இந்த பையன் நதிக்கு அப்பால் இருக்கின்றான், நதியின் மறுபுறத்தில் இருக்கின்றான், யோர்தானில் வேள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யோசுவாவிற்கும் இஸ்ரவேலுக்கும் நீர் ஒரு வழியை உண்டாக்கினது போல இவனுக்கும் செய்யாவிடில் இவன் நதியை கடப்பதற்கு வேறு வழியே கிடையாது. ஆகவே, பிதாவே, எங்கள் அருமையான சகோதரனை, ஓ, தேவனே, கடந்த இரவில் நான் தூக்கிச் செல்லப்பட்ட, இந்த வாக்குத்தத்தமாகிய அந்த மறுபுறத்தில், இவர் தாமே இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க அருள் புரியும் என்று உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில் உம்மை நான் கேட்கின்றேன். அந்தத் தேசத்தில் நான் இவரை அணைத்து பிடித்து என் விலையேறப்பெற்ற சகோதரர்களே'' என்று கூறுகின்ற சிலாக்கியத்தை நான் பெறுவேனாக. கர்த்தாவே, இதை அருளும். அந்த பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய வாக்குத்தத்தத்தை இவர் தாமே பெற்றுக்கொள்வாராக. ஆமென். 89ஓ கர்த்தாவே, இவர் என்னுடைய விலையேற பெற்ற சகோதரர். இவர் என்னிடம் அன்பாக இருந்து கொண்டிருக்கிறார், கணக்கிலடங்காத மணி நேரங்களாக எனக்காக நின்று கொண்டிருந்தார். விசுவாசத்தையுடையவனாக இருக்கிறேன் என்று நம்புகிறார். இப்பொழுது, இந்த என் நண்பரை சத்துரு பிடுங்க முயற்சிக்கின்றான். சர்க்கரை... இந்த பிள்ளையை அவனால் பிடுங்க முடியுமென்று நினைக்கின்றான்; ஆனால், நான் அவனுக்குப் பின்பாக வருகிறேன். உம்முடையதை திரும்பக் கொண்டு வரத்தக்கதாக நான் வருகிறேன், கர்த்தாவே, இந்த கல்லைகவணில் வைத்து சுழற்றிக் கொண்டு விசுவாசமான இலக்குடன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்த சர்க்கரை நீரிழிவை எதிர்த்து நிற்கிறேன் அவன்...?... உம்முடைய சொந்த ஆட்டை திரும்பவுமாக மந்தையில் கொண்டு வருகிறேன் பிதாவே, இயேசுவின் நாமத்தில். ஆமென். ஒரு சுரப்பி.. ஓ ஆண்டவரே, அளவு கடந்த உடல் மருத்த நிலை என்னவென்பதை எங்கள் சகோதரி அறிவார்கள், இந்த நிலை மாணத்தை பிறப்பிக்கின்ற ஒன்று என மருத்துவர் கூறுகின்றார். ஆயுள் காப்பீட்டு விளக்க புள்ளி விவரத்தின் படி உடல் எடை ஒரு பவுண்ட் கூடுகின்ற போது ஆயுட் காலத்தில் ஒரு வருடம் குறைகிறது என்றுள்ளது. இவர்களோ, தேவனுக்கு கனமும், புகழ்ச்சியுமாக ஜீவிக்க இவர்கள் விரும்புகிறார்கள். எந்த ஒரு மருத்துவராலும் இதைச் செய்ய முடியாது, பிதாவே தேவனே; இது உம்முடைய கரத்தில் மாத்திரமே உள்ளது. சகோதரி. பெல் மிகவும் விசுவாசமாக உள்ளார்கள், இவர்கள் அன்புள்ளவர்களாகவும், தயையுள்ளவர்களாகவும்...?... இவர்கள் அநேக கடுமையான சோதனைகளினூடாக சென்றிருக்கிறார்கள்; கர்த்தாவே, இன்றிரவு இவர்களுக்காக நான் வருகின்றேன். அங்கே இருக்கின்ற அந்த சத்துருவை சந்திக்க நான் வருகிறேன். அந்த கல்லானது அவனைச் சிதறச் செய்து, இந்த சகோதரியிடமிருந்து அவன் ஓடிப் போகட்டும். ஆகவே, இவர்கள் தாமே நிழற்படிந்த புல்லுள்ள இடங்களுக்கும், அமர்ந்த தண்ணீர்களண்டைக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக திரும்பக் கொண்டு செல்லப்படட்டும். ஆமென். சகோதரி. பெல், அவ்விதமாகவே அது நடக்கும். சிறிதளவும் கூட சந்தேகம் கொள்ள வேண்டாம்...?... 90(ஒரு சகோதரி சாட்சியளிக்கிறார்கள் - ஆசி.)...?... நிச்சயமாக சகோதரியே...?... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்...?... நீர் நேசிக்கிறவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும்...?... ஆம், ஐயர், அதைக் குறித்து எல்லாம் எனக்குத் தெரியும். அதை நாங்கள் உரிமை கோருகிறாம். சகோதரி. ஸ்பென்சர், உங்களுக்குத் தெரியும் எவ்வாறு அவளும் சகோதரன். ஜெஸியும் அதினூடாக செல்கிறார்கள் என்று...?... இங்கேயிருக்கம் சபைக்கு வருவதா என்று நான் மறுபுறத்திற்கு கடந்து செல்கையில், அவர்கள் இவ்விதமாக மெல்ல மெல்ல வாலிபமாயிருப்பார்கள், ஓ, சகோதரன் ஜெஸி...?... மற்றும் எல்லாரும். உங்களுக்கு தெரியுமா, அங்கே அதைக் கடந்து... அங்கே கடந்து செல்கையில் மறுபடியுமாக அந்த அருமையான வாலிபப் பெண்ணிடம் மற்றும் வாலிபப் பையனாகிய சகோதரன். ஜெஸியிடம் திரும்பிச் செல்வீர்கள். தேவன் உங்களுக்கு வாக்குரைத்திருக்கிறார். இப்பொழுது, கவனியுங்கள். நீங்கள் இங்கே கடைசி நபராக இருப்பதால் உங்களுக்கு ஒரு சிறிய அளவிலான, ஒரு பாடத்தை கற்பிக்க விரும்புகிறேன். ஏனெனில்... இந்த சார்லி உம்முடைய சிறிய பையன் என்று நானறிவேன். நீங்கள் ஜெபிக்கப்பட விரும்புகிறீர்கள்...?... 91இந்த ஒரு காரியத்தை நான் கூறவிரும்புகிறேன். வேதம் இதைக் கூறுவதை வேத வசனத்தில் எங்காவது வாசித்துள்ளீர்களா? பவுல் ரோம் நூற்றுக்கதிபதியிடம் கூறினான் (நான் பேசுவது உங்களால் கேட்க முடிகிறதா?) பிலிப்பியில் பவுல் சிறையில் இருந்த போது தன் பட்டயத்தால் தன்னைத்தானே வெட்டி செத்துப்போக முயற்சித்த அந்த ரோமனிடம் கூறினான். பூமியதிர்ச்சி அந்த சிறையை தரைமட்டமாக்கியது. அவன், ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்றான். நீங்கள் அதைக் குறித்து எப்பொழுதாகிலும் கேட்டதுண்டா?'' நீயும் உன் வீட்டாரும்...'' இப்பொழுது, கவனியுங்கள். உங்கள் இரட்சிப்புக்காக நீங்கள் போதுமான விசுவாசத்தை கொண்டவர்களாயிருக்கும் போது, உங்கள் பிள்ளைக்காக போதுமான விசுவாசத்தை உங்களாலே கொண்டிருக்க முடியாதா? தேவன் ஏதாவது ஒருவழியில்...?... கர்த்தாவே, இன்றிரவு நான் சகோதரி ஸ்பென்சர் மற்றும் சகோதரன். ஸ்பென்சருக்காக ஜெபிக்கிறேன், இந்த சிறிய வாழ்க்கையானது ஒரு கொடுமையான கனவைப் போல கழிந்தோடின பிறகு, வியாதியோ, வயதான நிலையோ, கவலை அல்லது ஏமாற்றமோ இல்லாத அங்கே இருக்கின்ற அந்த மகிமையான மகிழ்ச்சி மிக்க தேசத்தில் இவர்களுடைய ஒவ்வொரு பிள்ளையும் இவர்களும் இவர்களுடைய பிள்ளைகளும், எல்லாருமாக இருப்பார்களாக. இவர்கள் தாமே அதைப் பெற்றுக் கொள்ளட்டும், இவர்களுடைய எல்லா பிள்ளைகளும், இவர்கள் கணவரும், இவர்களுக்கு இனியவர்களாயிருக்கிற எல்லாரும், இவர்களை நேசிக்கின்ற எல்லாரும் மற்றும் இவர்கள் நேசிக்கின்ற எல்லோரும் அங்கே இவர்களோடு இருப்பார்களாக, இயேசுவின் நாமத்தில். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எண்பத்திரண்டு வயது. நீங்கள்...?... சகோதரி. ஸ்பென்சர், உலகமானது விழுந்து கொண்டிருக்கின்றது. 92நல்லது, இளைப்பாறுதலுக்கு செல்ல நீங்கள் தயாராக உள்ளீர்களா, நீங்கள் பாருங்கள்...?... எல்லா நேரமும்...?... நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவாக...?... இன்றிரவு, சகோதரி. ஸ்பென்சர், அவருடைய கிருபையால் நான் உங்களையும் ஜெஸியையும் அங்கே எல்லைக்கு அப்பால், வாலிபமாகவும் விடுதலையாகவும் காண்பேன். நீங்களும், ''என் சகோதரனே, என் சகோதரனே“ என்று கூச்சலிட்டு என்னை நோக்கி ஓடி வருவீர்கள். நான் உங்களைப் பார்ப்பேன். இது இவளுடைய நரம்பு பலவீனமாகும். பிதாவாகிய தேவனே, இந்த சிறு பெண்ணுக்கு நரம்புத் தளர்ச்சியுண்டாகும், மேலும் இவளுக்கு...? மாத்திரம்...?... தடையாகும். ஆனால், இன்றிரவு நான் இவளுக்காக வருகிறேன். பிதாவே, நான் உம்மிடம் வருகிறேன். நான் எறியப் போகும் அந்த கல்லினால் நீர் தாம் இலக்கை நோக்கி தாக்கும்படி நான் கேட்கின்றேன். அது தான் சரியாக குறி பார்க்கப்பட்டும், முனையில் இருக்கும் குறி சரியாக அவன்...?... இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலான இந்த ஜெபமானது அந்த நரம்பு தளர்ச்சியை தாக்கி அதை சுக்குநூறாக கிழித்துப் போட்டு, இந்த ஆட்டை தேவனுடைய மந்தைக்கு திரும்பக் கொண்டுவரட்டும். ஆமென். அது இப்பொழுதே நடந்திருக்க வேண்டும், தேனே...?... பரலோக தேவன், இவர்களுடைய ஆறுபிள்ளைகளும் இரட்சிக்கப்பட வேண்டும் என்கின்ற இவர்களுடைய வாஞ்சையை இவர்களுக்கு அருளும்... சகோதரன். டால்டன் தன் அருமை மகள்களைக் குறித்து சொன்ன சாட்சியை இவர்கள் கேட்டார்கள். பிதாவே, இவர்களுடைய ஆறு பிள்ளைகளுடைய இரட்சிப்புக்கு வாஞ்சையாயிருக்கிறார்கள். இந்த சகோதரி தன் பிள்ளைகளை கொண்டிருப்பார்கள்ளாக. இரவு என்ற ஒன்று இல்லாத, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பான நிலையிலுள்ள அந்த தேசத்திலே இச்சகோதரியை அவர்கள் சந்திப்பார்களாக. ஆமென். சகோதரியே இக்காரியத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாக உள்ளது. 93நான் நம்புகிறேன்... இதற்கு எந்த ஒரு காரியமும் உதவாது: இந்த நோய்க்கு அசிடோமின் போன்ற மருந்தை தருவார்கள்; அது... காரிடோன் என அழைப்பார்கள், ஆனாலும், அது உங்களை கொன்று விடும், உங்கள் இரத்தத்தை கிழித்து விடும்...?... ஆனால், அந்த... பாருங்கள், அந்த கீல்வாத நோய், ஆட்டை பிடித்து தூக்கி தூர ஓடிப்போகின்ற ஒரு சிங்கம் போன்றது. இப்பொழுது, ஒரு கவண்கல் என்ன செய்யும்? ஓ, என்னே ஒரு ஆட்டை வைத்துக் கொண்டிருக்கிற ஒரு பெரிய கர்ச்சிக்கின்ற சிங்கம். அதற்கு ஆடு என்றால் பிடிக்கும், ஆகவே, அந்த ஆட்டை பிடித்துக் கொண்டு ஓடிவிட்டது; ஆனால் தாவீது கவண் கல்லை எடுத்து அந்த சிங்கத்தை துரத்திச் சென்றான். பாருங்கள், இப்பொழுது கவனியுங்கள். அவனிடம் ஐந்து கற்கள் இருந்தன: வி-சு-வா-ச-ம், மற்றும் அவன் தா-ன். அவனுடைய கவண் இந்த கரத்தில் இருந்தது, இ-யே-சு (J-E-S-U-S). அவன் விடப்போது மரண அடி கொடுக்கின்ற ஒன்று. ஏதோ ஒன்று நடந்தாக வேண்டும்; இந்த ஜெபத்தினாலே இன்றிரவு அந்த இல்லாத நோயை நாம் பின் தொடருவோமாக, தேவன்உங்களுக்கு இதை அருளுவாராக. இவர்கள் ஞானஸ்நானம் பெற விரும்புகிறார்கள்... இவள் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று விரும்புகிறீர்களா...?... சகோதரியே, உமக்கு நன்றி. அது அந்த வழி என்றல்ல...?... ஏனெனில்... இப்பொழுது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று வேதாகமத்தில், நான் அதில் விசுவாசம் கொண்டு உங்களோடு நானும் தரித்திருப்பேன். நான் வித்தியாசமானவனாக இருக்க விருப்பமில்லை. எனக்கு...?... நான் அதற்கு பதில் கூற வேண்டியவனாக உள்ளேன். புரிகின்றதா? அது என்ன கூறுகின்றதோ அந்த விதமாகத் தான் நானும் கூற வேண்டியவனாக இருக்கிறேன், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றல்ல, ஆனால் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. 94இப்பொழுது, பிதாவே, இவர்களுடைய அருமையானவர்களுக்காக நாங்கள் வருகிறோம். இவர்களுக்கு மூட்டு வீக்கம் உள்ளது, மேலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள இவள் விரும்புகிறாள், ஏனெனில் அது தான் நுழைவிடம்; அது தான் திறந்த வாசல். அங்கே தான் யோசுவா வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்லுகின்ற அந்த ஒரே பாதையை திறந்தான். இரண்டு அல்லது மூன்று இடங்கள் திறக்கப்படவில்லை; ஓ, ஒன்றே ஒன்று தான் இருந்தது. பெந்தெகொஸ்தே நாளிலே, பேதுரு, சபையானது முதன் முதலாக துவக்கிவைக்கப்பட்ட போது, ஒரு பாதையைத் திறந்து, ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று கூறினான். அந்த பாதையிலிருந்து அவர்கள் அகலவேயில்லை: ஒவ்வொருவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து சென்றனர். சிலர் ஆற்றில் நடந்து கடக்க கூடிய வேறொரு ஆழமில்லாப் பகுதியில் கடந்து செல்ல முயற்சித்தனர், பவுல் அவர்களிடம், ''நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்? நீங்கள் எந்த இடத்தின் மூலமாக கடந்து செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்றான். அவர்கள், “அதோ அங்கே யோவான் நோக்கின இடத்தில்” என்றனர். அவன், ''நல்லது, யோவான் காலத்தையும் அந்த இடத்தை மாத்திரமே கட்டிக் காட்டினான்.'' என்றான். அவர்கள் இதைக் கேட்ட மாத்திரத்தில் சரியாக அந்த ஆழமில்லாத ஆற்றுப் பகுதியிலேயே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர், அவர்கள் நேராக அதற்குள்...?... ஆவியின் ஜீவியம். இதை எங்கள் சகோதரிக்கும் அவர்களுடைய இனிமையானவர்களுக்கும் அருளும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 95சகோதரன். லைல்... ஓ... ஆம்...?... அது மற்றும் அவர் அளித்த தரிசனம்...?... அது முடிவு பெற்று விட்டது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லுகின்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள், சகோதரன்...?... இந்த ஊழியமானது எனக்கு உறுதிபடுத்தப்பட்ட போது, ஒரு நாள் ஒரு மனிதனுடன் ஒரு ஆற்றில், ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததை இங்கே எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளீர்கள்? நான் சிறிய மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என் மீது வந்தார். அங்கே ஒரு பெரிய மனிதன் இருந்தார், அவர் யெகோவா சாட்சிகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர். அவருடைய சகோதரன் இங்கு எங்கோ இருக்கின்றார், பாங்க்ஸ் உட். அவர் என் பக்கத்து வீட்டைச் சார்ந்தவர். அவர் இங்கே எங்கோ இருக்கின்றார். இவர் லைல். ஆகவே, இவர்கள் யெகோவா சாட்சிகள் ஸ்தாபன மக்களாயிருந்தனர். இந்த பையன் மனமாற்றமடைந்த பிறகு நாங்கள் ஒரு நாளிலே அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவருடைய வாழ்க்கையில் இருந்த ஒன்றைக் குறித்தும், என்னவெல்லாம் சம்பவித்ததென்றும், அதைக் குறித்த எல்லாவற்றையும், எப்படி அதை தன் வாழ்க்கையிலிருந்து அதை எடுத்துப்போட்டார் என்பதையும் நான் கூறினேன், இப்பொழுது அவர் அதை என்னிடம் கூறினார். அது சரி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அது முற்றிலும் சரி. அவருடைய தகப்பனார் அங்கே உத்தியோகத்தில் இருந்தார். இங்கு கூட்டத்தில் இருக்கின்றாரா? இவரும் இவருடைய மனைவியும் சாட்சிகளாக இங்கே குளத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர். இந்த மனிதன் அவருக்கருகில் அமர்ந்திருந்தார், என் சகோதரரர். 96பாங்க்ஸ், எங்கேயிருக்கிறீர்கள்? அவர் உள்ளே இருக்கின்றாரா? அங்கே பின்புறத்தில் மூலையில். ஆம். ஆகவே, நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். ஆகவே சகோதரனே, என் சிறு பையன் அதைக் கொன்றான்... அந்த பூனைக் குட்டியை சில நாட்களுக்கு முன்பாக கொன்றுவிட்டான் என்று நான் நினைத்தேன். ஒரு வயதான பூனை சிறு குட்டிகளை ஈன்றிருந்தது. ஆகவே, இவன் அதை தூக்கி கீழே போட்டுவிட்டான். நான் நினைத்தேன்... நான், ''கர்த்தர் ஒரு சிறிய ஜீவனை எழுப்பப் போகிறார்,'' என்றேன். அதற்கு முந்தைய நாள். லைல், நான் கூறுவது சரிதானோ? அங்கே அந்த குளிரில் நின்று கொண்டு, நான், ''கர்த்தர் உரைக்கிறதாவது என்றேன். நாங்கள் இரவு முழுவதுமாக தூண்டில் போட்டோம், ஒன்றுமே அகப்படவில்லை. அடுத்த நாள் காலை அங்கே அந்த சிறிய வளைகுடாவில் புளுகில் மீனை பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தோம், அது ஒரு சிறிய மீனாகும். சகோதரன். லைல் ஒரு பெரிய கொம்பை வைத்திருந்தார், அவர் அந்த சிறிய புளுகில் மீனானது அந்த பெரிய கொக்கியை விழுங்கும் படிக்கு விட்டு விட்டார், அந்த கொக்கி ஆழமாக சென்றது, அந்த சிறிய புளுகில் மீனின் வயற்றில் பெரிய கொக்கி. ஆகவே, அவர் இழுத்தபோது அவர் அந்த மீனின் குடல்கள் மற்றும் அந்த புளுகில் மீனிலிருந்த எல்லாவற்றையுமே வெளியே இழுத்துவிட்டார், ஏனெனில் அந்த பெரிய கொக்கியானது மீனின் வயிற்றின் பகுதியில் ஆழமாக சிக்கிவிட்டது. ஆகவே, அவர் அப்படி செய்தபோது, அவர் அதை தண்ணீருக்குள் போட்டுவிட்டார், அது நான்கு அல்லது ஐந்து தடவை துடித்தது, இறந்துபோனது; ஏனெனில் அதனுடைய குடல்களும் செதில்களும் அதன் வாயிற்கு வெளியே இருந்தது. அது அங்கே அறைமணி நேரமாக தண்ணீரில் மிதந்து, புதர்களுக்குள்ளாக மிதந்து சென்றுவிட்டது. 97நான் அங்கே உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தேன், சடுதியாக பரிசுத்த ஆவியானவர் வந்து அந்த மீனை நோக்கி பேசு“ என்றார். நான், “சிறிய மீனே, இயேசு கிறிஸ்து மறுபடியுமாக உனக்கு ஜீவனை அளிக்கின்றார்'' என்றேன். மரித்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அந்த சிறிய மீன், மறுபக்கமாக திரும்பி சர்ர்ர்ர் ரென்று தண்ணீருக்குள், அதினால் கூடுமானவரை வேகமாக நீந்திச் சென்றது. சகோதரன். லைல், சகோதரன். உட் இங்கே உட்கார்ந்திருக்கின்றனர். சகோதரன். லைல் கூறினார், ''சகோதரன். பிரன்ஹாம், அது எனக்காகத் தான், ஏனெனில் நான் கூறினேன் அந்த சிறிய...'' என்றார். ''நான் இல்லை...?...'' அவர் கூறினார், அவர் அந்த மீனிலிருந்து குடல்களை வெளியே எடுத்துப்போட்டு, அதை வீசி எறிந்த போது, ''சிறியவனே உன்னுடைய கடைசி...'' அதை வெளியே எறிந்து, ''அது - அது என்னைத் தான் குறிக்கிறது'' என்றார். நான், ''இல்லை, சகோதரன். லைல், அது அப்படியல்ல'' என்றேன். சகோதரன். பாங்க்ஸ் அங்கே “தேவனுடைய வல்லமையானது கீழே வந்து இதைப் போன்ற ஒரு காரியத்தை செய்வதை சரியாக அதே இடத்தில் நாம் நின்று பார்த்தோம், நாம் நின்ற அதே இடத்தில் இந்த உலகத்தில் எத்தனை மக்கள், எத்தனை ஆயிரம் பேர் நின்றிருக்க விரும்பியிருப்பார்கள்?'' என்று கூறினார். வேறு விதமாகக் கூறுவோமானால், அவர்... ''இங்கே இருப்பது அருமையானது. இங்கே மூன்று கூடாரங்களைக் கட்டலாம் என்று பெதுரு உணர்ந்தது போல நாங்கள் எல்லாரும் உணர்ந்தோம் என்று நான் நம்புகிறேன். ''அது சரி. 98இப்பொழுது சகோதரன். லைல், நீங்கள் இப்பொழுது பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எகிப்தை விட்டு விட்டீர்கள்; பூண்டு பானைகளும் உலக அசுத்தங்களும் உங்கள் பின்பாக தங்கிவிட்டது. நீங்கள் இப்பொழுது யோர்தான் கரை யோரத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள், கடந்து அடுத்தது செல்ல வேண்டியது தான். தேவன் உங்களை அக்கரைக்கு கொண்டுச் செல்வாராக. சர்வவல்லமையுள்ள தேவனே, இங்கே உம்முடைய (trophy) பந்தயப் பொருள். அவர் மிகவும் பயந்திருப்பார், கர்த்தாவே, ஆனால் என் இருதயம் அவர் பின்னே சென்றது. எங்கள் ஜெபங்கள் ஒரு பலமான அடியை கொடுத்தது, ஏனெனில், அவரை பிடித்துக் கொண்டிருந்த அதே காரியமானது அவரை விட்டுச் சென்றுவிட்டது. அது நொறுக்கப்பட்டு விட்டது, இப்பொழுது அவர் யோர்தானுக்குள் நடந்து சென்று கொண்டிருக்கிறார். கர்த்தாவே, அவரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கொண்டு சென்று, அவருடைய மக்களோடு முத்திரை போடும், அந்த மகிமையான நாளிலே நாம் எல்லாரும் சந்திக்கும் வேளையில் அவர், ''என் விலையேறப் பெற்ற சகோதரன்“ என்று அவர் கூக்குரலிட்டு என்னைக் கட்டித்தழுவுகின்ற அவருடைய கரங்களின் மனமார்ந்த வரவேற்பை நான் உணருவேனாக. நானறிவேன்...?... பாங்க்ஸ்யும், அவர்களை அவருடன் கொண்டு வாரும் கர்த்தாவே, நீர் செய்வீரா? சகோதரி, மற்றும் அவர்களெல்லாரும், சகோதரி, மற்றும் அந்த பெரிய குடும்பத்தையும். நாங்கள் எல்லாரும் அங்கே சந்திப்போமாக, கர்த்தாவே, ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பார்களாக. இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். சகோதரனே, நீர் அதைப் பெற்றுக்கொள்வீர். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆம் சகோதரன்...?... 99தொலைபேசியில் தகவல் வந்துள்ளது. யாரோ ஒருவர் மரித்துக் கொண்டிருக்கிறார்; நான் செல்ல, சகோதரன். நெவிலிடம் ஆராதனையை ஒப்படைக்கிறேன்...?.... (சகோதரன். நேவில் பேசிவிட்டு, சபைக்கு கடைசி ஜெபத்தை செய்து முடிக்கின்றார், சகோதரன். பிரன்ஹாம் திரும்பவும் வந்து பேசுகிறார் - ஆசி.) ஒரு வாலிப பிரசங்கி பிரசங்கபீடத்திலேயே மரித்துப் போனார்...?... நாங்கள் விசுவாசம் என்னும் கல்லை அனுப்பினோம்...?... இன்றிரவு...?... அவர் ஒரு மகத்தான மனிதர், இயேசு கிறிஸ்தவின் நாமத்தில் நான் அவருக்கு பின்பாக (பிரதாப்கள் சுவாசக் என்னும் பல ஜெபத்தை அனுப்பினேன்...?... அவருடைய நாடித் துடிப்பு நின்றுபோன அந்த... அவரிடம் விட்டுச் சென்றது...?... அவருடைய நாடித் துடிப்பு...?... கண்கள் அப்படியே நின்று விட்டது...?... பிரசங்க பீடத்தில் அப்படியே விழுந்தார்...?... இன்னும் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறதா? உங்கள் கவனத்தை சற்று நான் கோரலாமா...?... ஒரு வாலிப சுவிசேஷகர், இண்டியானாவில் ஒரு பிரசங்கி பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பிரசங்க பீடத்தில் மரித்து கீழே விழுந்து விட்டார், பிரசங்க பீடத்தில் மரித்தார், ஒரு புகழ் பெற்ற சுவிசேஷகர், இண்டியானாவில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அந்த மேய்ப்பர் வந்து என்னை தொலைபேசியில் அழைத்தார். ஆவியின் அபிஷேகத்தோடு பிரசங்கித்துக் கொண்டிருக்கையில் அவர் மரித்தர், முன்னே விழுந்தார், அவர் கண்கள் அப்படியே நின்றுவிட்டன, அவருடைய சுவாசம் அவரை விட்டுச் சென்றுவிட்டது. மரித்து விட்டார் என அறிவிக்கப்பட்டது, ஒரு மணி நேரமாக மரித்துக்கிடக்கின்றார். ஏதோ ஒன்று அவர்களிடம் சபையை தொலைப்பேசியில் அழைத்து என்னை ஜெபம் செய்ய வைக்கும் படிக்குச் சொன்னது. அவரை மறுபடியும் கொண்டு வரத்தக்கதாக கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபத்தை நான் அனுப்பினேன். அது குறியைத் தவற விடாதபடிக்கு நீங்களும் என்னுடன் விசுவாசத்தினாலே இணைத்துக் கொள்ளுங்கள்...?... அவரை திரும்பக் கொண்டு...?... அவரை திரும்பக் கொண்டு வரட்டும். உங்களுக்கு நன்றி. தேவன் உங்களோடு இருப்பாராக. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) அடுத்த புதன் இரவில் சந்திக்கும் வரை. ஜார்ஜியாவில் அதைச் சுற்றியுள்ள ஜனங்களுக்கு, விடை பெற்றுக் கொள்கிறேன். தேவன் உங்களோடு இருப்பாராக. சகோதரன் மேய்ப்பர்... (சகோதரன். பிரன்ஹாம் பேசி மற்றவர்களுக்காக ஜெபிக்கின்றார் - ஆசி)... நான் இதை...?... இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்...?... (வார்த்தைகள் தெளிவாக ஒலி நாடாவில் கேட்கவில்லை - ஆசி.) அட்டைக்காக நன்றி. உங்களை அங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி...?... உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி...?... ஓ, அப்படித்தானே? (வார்த்தைகள் தெளிவாகக் கேட்கவில்லை - ஆசி )...?... உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. எப்படியிருக்கிறீர்கள்? சகோதரனே எப்படியிருக்கிறீர்கள்? ஆம், நான்... அது அருமையானது. அற்புதமானது. இப்பொழுது அவர்கள் விசேஷித்த இடத்தை...?... இக்காலை நீங்கள் இருந்தீர்களா?... நல்லது. அது மிகவும் அருமையானது சகோதரியே...?... உங்களையும், உங்கள் கணவரையும், சிறு பிள்ளைகளையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. தேனே, சென்று வா. தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, உமக்கு நன்றி, உமக்கு நன்றி. நீங்கள் இங்கு இருந்ததுமிக்க மகிழ்ச்சி. உங்களோடு இருந்து ஆராதித்தும் மகிழ்ச்சியாக இருந்தது.